இஸ்ரேல் தேர்தல்: நெதன்யாகுவின் கூட்டணி முன்னிலை; ஆனால் பெரும்பான்மை இல்லை - முடிவுகள் உணர்த்துவது என்ன?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
இஸ்ரேல் தேர்தல்: நெதன்யாகுவின் கூட்டணி முன்னிலை; ஆனால் பெரும்பான்மை இல்லை - முடிவுகள் உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம், AFP via Getty Images இஸ்ரேலின் தேர்தல் முடிவு குழப்பமானது - இதோ அதற்கான காரணங்கள்: இஸ்ரேல் பொதுத் தேர்தலின் பகுதி முடிவுகளின்படி, நீண்டகாலமாகப் பிரதமராக இருந்து வரும் பெஞ்சமின் நெதன்யாகு, தனது போட்டியாளரும் ராணுவ முன்னாள் தலைவருமான காடி ஐசன்கோட்டை விட முன்னிலையில் உள்ளார். இருப்பினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதற்குத் தேவையான இடங்கள் அவருக்குக் கிடைக்கவில்லை. 85 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், நெதன்யாகுவின் லிகுட் கட்சியும் அதன் தீவிர வலதுசாரி மற்றும் தீவிர மரபுவழி யூதக் கூட்டணிக் கட்சிகளும் 120 இடங்களைக் கொண்ட நெசட்டில் (நாடாளுமன்றம்) 53 இடங்களைக் கைப்பற்றும் நிலையில் இருந்தன. ஐசன்கோட்டின் யாஷார் கட்சியும், அவரது அணியில் உள்ள மற்ற மூன்று யூத எதிர்க்கட்சிகளும் சேர்ந்து 48 இடங்களைக் கைப்பற்றும் நிலையில் இருந்தன. 85% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், நெதன்யாகுவின் லிகுட் (Likud) கட்சியும் அதன் தீவிர வலதுசாரி மற்றும் தீவிர மரபுவழி (orthodox) யூதக் கூட்டணிகளும் 120 இடங்களைக் கொண்ட நெசட்டில் (Knesset) 53 இடங்களை வெல்லும் பாதையில் இருந்தன. ஐசன்கோட்டின் யாஷர் (Yashar) கட்சியும் அவரது கூட்டணியில் உள்ள மற்ற மூன்று யூத எதிர்க்கட்சிகளும் 48 இடங்களைப் பெறும் நிலையில் இருந்தன. இரு தலைவர்களுமே ஆட்சியமைப்பதற்கான கூட்டணியை உருவாக்க முயற்சி செய்யப் போவதாக தெரிவித்துள்ளனர். அரபு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் 19 இடங்களைக் கைப்பற்றும் நிலையில் உள்ளன. இதனால், ஆட்சியமைப்பதில் அவை முக்கியப் பங்கு வகிக்கக்கூடும். ஆனால், யூதக் கட்சிகளில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் அந்தக் கட்சிகளுடன் இணைந்து செயல்படப் போவதில்லை என்று உறுதியளித்துள்ளன. ராணுவ வீரர்கள், தூதர்கள், மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் உள்ளிட்டோரின் 4,30,000 முதல் 4,80,000 வரையிலான தபால் வாக்குகள் இன்னும் எண்ணப்படவில்லை. எனவே, தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாக இன்னும் ஓரிரு நாட்கள் ஆகலாம். இறுதி முடிவுகள் உறுதிசெய்யப்பட்டதும், அதிபர் ஐசக் ஹெர்சாக் அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்துவார். அதன் பிறகு, ஆட்சியமைப்பதற்கான அதிக வாய்ப்புள்ள தலைவர் என்று தாம் கருதுபவரை அரசு அமைக்குமாறு அழைப்பார். இந்த நடைமுறைக்கு சில வாரங்கள் ஆகலாம். End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு அவர்கள் ஆட்சியமைக்கத் தவறினால், இறுதியில் மீண்டும் ஒரு தேர்தலை நடத்த வேண்டியிருக்கும். ஜெருசலேமில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது, செவ்வாய்க்கிழமை தேர்தலில் 77.7 சதவிகித வாக்குப்பதிவு பதிவானதை ஹெர்சாக் பாராட்டினார். கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான காலத்தில் இது இஸ்ரேலில் பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவாகும். "இது இஸ்ரேலிய சமூகத்துக்குப் பெருமை சேர்க்கும் விஷயம். இஸ்ரேலில் ஜனநாயகத்தின் மீதான விருப்பம் எந்த அளவுக்கு ஆழமாக உள்ளது என்பதைப் பார்ப்பது வியப்பாக இருந்தது," என்று அவர் கூறினார். அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் தமக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், அதன்பிறகு ஒவ்வொரு கட்சியுடனும் ஆலோசனைகளைத் தொடங்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். "குறிப்பாக நேற்று நடந்தவற்றுக்குப் பிறகு, மற்றொரு தேர்தலைத் தவிர்ப்பதற்கு நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். எனவே, இங்கு வரும் ஒவ்வொருவரும் திறந்த மனதுடன் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்," என்றும் அவர் கூறினார். பிரதமர் நெதன்யாகுவும் அவரது முக்கியப் போட்டியாளரான ஐசன்கோட்டும் ஆட்சியமைக்கும் கூட்டணியை உருவாக்கும் பொறுப்பு தங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். பட மூலாதாரம், EPA மூன்று இஸ்ரேலிய தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிட்ட ஆரம்பகட்ட வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள், ஐசன்கோட்டின் "மாற்றத்துக்கான கூட்டணி" நாடாளுமன்றத்தில் 52 முதல் 53 இடங்களைக் கைப்பற்றும் என்றும், நெதன்யாகுவின் கூட்டணி 50 இடங்களைப் பெறும் என்றும் கணித்திருந்தன. இதையடுத்து, மக்கள் "மாற்றத்துக்கு ஆதரவாகத் தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளனர்" என்று ஐசன்கோட் அறிவித்தார். "தோல்வியடைந்த கூட்டணி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது," என்று டெல் அவிவில் உள்ள யாஷார் கட்சியின் தேர்தல் தலைமையகத்தில் ஆதரவாளர்களிடம் அவர் கூறினார். "மக்களின் தீர்மானம் ஒரு சியோனிச அரசாங்கமாக உருவெடுப்பதை உறுதிசெய்ய, எனது கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படுவேன்," என்றும் அவர் தெரிவித்தார். பின்னர், அந்தத் தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களது கருத்துக்கணிப்பு முடிவுகளைப் புதுப்பித்தன. அவற்றில் இரண்டு நிறுவனங்கள் இரு அணிகளும் தலா 51 இடங்களைக் கைப்பற்றும் என்று கணித்தன. மற்றொரு நிறுவனம் நெதன்யாகுவின் கூட்டணி மூன்று இடங்கள் முன்னிலை பெறும் என்று தெரிவித்தது. அதன்பிறகு, ஜெருசலேமில் உள்ள லிகுட் கட்சித் தலைமையகத்தில் தோன்றிய நெதன்யாகு, தனது வலதுசாரிக் கூட்டணி "மிகப் பெரிய பெரும்பான்மையை" வென்றுள்ளதாக அறிவித்தார். "வலுவான வலதுசாரி தேசிய அரசாங்கத்தை நாம் அமைக்க வேண்டும்," என்று அவர் கூறினார். "சியோனிசத்துக்கு எதிரான அரபுக் கட்சிகளின் ஆதரவை நம்பியிருக்கும் அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் இஸ்ரேலை ஆபத்தில் ஆழ்த்துவது தடுக்கப்பட்டுள்ளது, அவ்வாறு செய்வது கூடவே கூடாது," என்றும் அவர் தெரிவித்தார். புதன்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டபோது, கருத்துக்கணிப்புகள் கணித்ததைவிட நெதன்யாகுவின் கூட்டணி சிறப்பாகச் செயல்பட்டிருப்பதும், 53 இடங்களைக் கைப்பற்றும் நிலையில் இருப்பதும் தெரியவந்தது. இருப்பினும், கடந்த நாடாளுமன்றத்தில் அந்தக் கூட்டணி முன்பு கட்டுப்பாட்டில் வைத்திருந்த இடங்களைவிட இது 15 இடங்கள் குறைவாகும். பட மூலாதாரம், Nir Keidar/Anadolu via Getty Images செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல், 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தலைமையில் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்களுக்குப் பிறகும், அதைத் தொடர்ந்து காஸா, லெபனான், இரான் ஆகிய இடங்களில் நடந்த போர்களுக்குப் பிறகும் நடைபெற்ற முதல் தேர்தலாகும். இஸ்ரேலின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்களில் ஒன்றாகவும் இது கருதப்பட்டது. ஏனெனில், இந்தத் தேர்தல் நாட்டின் தலைமையைத் தீர்மானிப்பதுடன், தற்போதைய கடுமையான நிலைப்பாட்டையும் மதம் சார்ந்த தேசியவாதப் போக்கையும் இஸ்ரேல் தொடர்ந்து பின்பற்றுமா என்பதையும் தீர்மானிக்கக்கூடும். அக்டோபர் 7 தாக்குதல்களுக்கு வழிவகுத்த பாதுகாப்புத் தோல்விகளுக்குப் பொறுப்பேற்பது, பிராந்தியப் போர்கள் கையாளப்பட்ட விதம், தீவிர மரபுவழி யூத ஆண்களை ராணுவத்தில் கட்டாயமாகச் சேர்ப்பது, நீதித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச அளவில் இஸ்ரேலின் நற்பெயர் ஆகியவை தேர்தல் பரப்புரையில் முக்கியப் பிரச்னைகளாக இருந்தன. முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட்டின் எதிர்க்கட்சியான பெயாகாத் கட்சிக்கு வாக்களித்த க்ஃபார் சாபாவைச் சேர்ந்த அவிகாயில் லெவின், தேர்தல் முடிவுகள் தமக்கு ஏமாற்றமளிப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார். "புதிய தலைமை அமையும் என்று நம்பினேன். ஒரு தேசமாக நமக்கு அது தேவை என்று நினைக்கிறேன்," என்றார் அவர். "அக்டோபர் 7 அன்று அதிகாரத்தில் இருந்தவர்கள் இப்போதும் அதிகாரத்தில் இருக்கக் கூடாது," என்றும் அவர் கூறினார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களுக்கு நெதன்யாகு பொறுப்பேற்காதது மக்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்தத் தாக்குதல்களில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர்; 251 பேர் பணயக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்டனர். பீரி கிப்புட்ஸில் கொல்லப்பட்டவர்களில் அவரது கணவரின் பாட்டியும் ஒருவர். ரமத் கானைச் சேர்ந்த கால் என்பவர், நெதன்யாகுவுக்கு வாக்களித்ததாகத் தெரிவித்தார். இஸ்ரேலியர்கள் தங்களது அண்டை நாடுகளுடன் அமைதியாக வாழ முடியாத நிலை இருப்பதாக அவர் கூறினார். "நம்மை உலக வரைபடத்திலிருந்து முற்றிலுமாக அழித்துவிட வேண்டும் என்று மட்டுமே அவர்கள் விரும்பும்போது, இஸ்ரேலியர்களால் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ முடியாது," என்றார் அவர். அரசியலில் அரபுக் கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்து வருவதும் தமக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறினார். புதன்கிழமை, தேர்தலில் தாங்கள் "ஏமாற்றப்பட்டதாக" லிகுட் கட்சி குற்றஞ்சாட்டியது. வாக்காளர்களைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக எதிர்தரப்பினர் "லஞ்சம், மிரட்டல், வன்முறை, மோசடி மற்றும் தடை செய்யப்பட்ட மென்பொருள் பயன்பாடு" ஆகியவற்றில் ஈடுபட்டதாக அந்தக் கட்சி குற்றஞ்சாட்டியது. எனினும், இதற்கான எந்த ஆதாரத்தையும் அது வழங்கவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் தேர்தலுக்குப் பிந்தைய ஆய்வின் ஒரு பகுதியாகப் பரிசீலிக்கப்படும் என்று மத்திய தேர்தல் குழு தெரிவித்தது. பட மூலாதாரம், Reuters இஸ்ரேலிய அரபு மக்களிடையே வாக்குப்பதிவு அதிகரித்துள்ளதால், இரண்டு அரபுக் கட்சிகளான ஐக்கிய அரபுப் பட்டியல் (United Arab List) மற்றும் கூட்டுப் பட்டியல் (Joint List) ஆகியவை தங்களது பிரதிநிதித்துவத்தை ஏறக்குறைய இரட்டிப்பாக்கும் நிலையில் உள்ளன. இஸ்ரேலின் மக்கள்தொகையில் சுமார் ஐந்தில் ஒரு பங்காக உள்ள அரபு இஸ்ரேலியர்கள், தங்களைப் பெரும்பாலும் இஸ்ரேலின் பாலத்தீனக் குடிமக்கள் என்று குறிப்பிடுகின்றனர். ஹைஃபாவுக்கு அருகிலுள்ள கிராமத்தில் வசிப்பவரும், அரபு மக்களிடையே வாக்குப்பதிவை அதிகரிப்பதற்காகப் பிரசாரம் செய்தவருமான மஹ்தி கபாஹா, இந்தத் தேர்தல் முடிவை "வரலாற்றுச் சிறப்புமிக்கது" என்று வர்ணித்தார். "அரபுக் குடிமக்கள் வெளியே வந்து, இந்த நாட்டில் தங்களுக்கும் உண்மையான பங்கு வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளனர்," என்றார் அவர். கூட்டுப் பட்டியல் கட்சியின் தலைவர் யூசுப் ஜபரீன், தீவிர வலதுசாரி தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-க்விரை பதவியிலிருந்து அகற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்ததே அரபு வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்கத் தூண்டிய காரணங்களில் ஒன்று என்று பிபிசியிடம் தெரிவித்தார். பென்-க்விர் இனவாதத்தில் ஈடுபடுவதாகவும், அரபு சமூகத்துக்கு எதிராகத் தொடர்ந்து ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். யூத சக்தி கட்சியின் தலைவரான பென்-க்விர், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை இஸ்ரேலுடன் இணைக்க வேண்டும் என்றும், காஸாவில் யூதக் குடியேற்றங்களை அமைக்க வேண்டும் என்றும், பாலத்தீன மக்கள் "தன்னார்வமாக வெளியேற வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார். பாலத்தீனர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் அவர் செயல்படுவதாகக் கூறி, பல மேற்கத்திய நாடுகள் அவருக்கு எதிராகத் தடைகளை விதித்துள்ளன. 2021 தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்பட்டு குறுகிய காலமே நீடித்த ஆளும் கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஐக்கிய அரபுப் பட்டியல் கட்சியின் தலைவர் மன்சூர் அப்பாஸ், செவ்வாய்க்கிழமை இரவு பேசும்போது, "எண்ணிக்கைகள் நமக்குச் சாதகமாக அமையும் என்றும், நாமும் மாற்றத்துக்கான கூட்டணியும் இணைந்து நாடாளுமன்றத்தில் 61 இடங்களைப் பெற முடியும் என்றும் நம்புகிறேன்," என்றார். இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் தலைவர் யாயிர் கோலன், ஐசன்கோட்டின் அணியில் உள்ள தனது கூட்டாளிகளிடம், அரபுக் கட்சிகளுடன் இணைந்து நெதன்யாகுவின் கூட்டணியை மாற்றி, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார். "நாம் தொடர்ந்து அச்சத்தில் வாழ்வதை நிறுத்தாவிட்டால், இங்கு நமக்கு எதிர்காலம் இல்லை. இனவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டாலும் நமக்கு எதிர்காலம் இல்லை," என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அரபுக் கட்சிகளுடன் இத்தகைய கூட்டணியை அமைப்பது குறித்து ஐசன்கோட் ஏற்கெனவே ஆட்சேபனைகளைத் தெரிவித்திருந்தார் அல்லது சில நிபந்தனைகளை விதித்திருந்தார். இஸ்ரேல் ஒரு யூத மற்றும் ஜனநாயக நாடு என்பதை அங்கீகரிப்பதும், ஹமாஸ் அழிக்கப்பட வேண்டிய பயங்கரவாத அமைப்பு என்பதை ஏற்றுக்கொள்வதும் அந்த நிபந்தனைகளில் அடங்கும். இதற்கிடையில், ஐசன்கோட்டின் அணியில் உள்ள வலதுசாரிக் கட்சிகள் அரபுக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ளன. "எதிர்க்கட்சிகள் எந்த நிபந்தனைகளையும் விதிக்க முடியாது," என்று ஜபரீன் கூறினார். "இஸ்ரேலின் எதிர்க்கட்சிகள் உண்மையான, அடிப்படையான மாற்றத்தையும், ஆபத்தான தீவிர வலதுசாரி அரசாங்கத்துக்கு மாற்றான ஓர் அரசாங்கத்தையும் உருவாக்க விரும்பினால், அவர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கும்," என்றும் அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை