இஸ்ரேல் தேர்தல் நிலவரமும், அடுத்தடுத்த அரசியல் திருப்பங்களும் - ஒரு விரைவுப் பார்வை

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
இஸ்ரேல் தேர்தல் நிலவரமும், அடுத்தடுத்த அரசியல் திருப்பங்களும் - ஒரு விரைவுப் பார்வை

பெஞ்சமின் நெதன்யாகு (இடது), கோடி ஐசென்கோட் (வலது) உலகமே எதிர்பார்த்த இஸ்ரேல் பிரதமர் தேர்தல் நடந்து முடிந்து, அதில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. வியாழக்கிழமை (அக்.29) பிற்பகல் நிலவரப்படி கிட்டத்தட்ட 93% வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு சார்ந்த லிகுட் கட்சி தலைமையிலான அணி 53 இடங்களையும், ஐசன்கோட் தலைமையிலான எதிரணி 48 இடங்களையும் பெற்றிருக்கின்றன. அரபு கட்சிகள் கூட்டணி 19 இடங்களைக் கையில் வைத்துள்ளன. இது இறுதியான நிலவரம் அல்ல. நாளைக்கு ஸ்பெஷல் வாக்குகள் எனப்படும் ராணுவ வீரர்கள், வெளிநாட்டு தூதரக வாக்குகள் எண்ணப்படும்போது எண்ணிக்கை நிலவரம் மாறக்கூடும். இந்த முன்னணி நிலவரத்துடன் சுருக்கமாக இஸ்ரேல் தேர்தல் நடைமுறையை பார்த்துவிடலாம். இஸ்ரேல் தேர்தல் மிகவும் வித்தியாசமானது. அந்நாட்டு நாடாளுமன்றமான நெஸட் (Knesset), மொத்தம் 120 பிரதிநிதிகளைக் கொண்டது. இந்தியாவைப் போல் மாநிலங்களுக்கு இத்தனை தொகுதி என்றெல்லாம் இல்லை. ஏனெனில் அங்கே தொகுதி வாரியாக தனிப்பட்ட வேட்பாளருக்கு மக்கள் வாக்களிப்பதில்லை. மாறாக, கட்சிக்கு / கூட்டணிக்கு வாக்களிக்கின்றனர். விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. அதனால், ஒரு கட்சிக்கு எவ்வளவு சதவீதம் ஓட்டு கிடைக்கிறதோ, அவ்வளவு சதவீதம் சீட்டு கிடைக்கும். அந்த வகையில், இஸ்ரேல் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு கட்சியும் நாடாளுமன்றத்துக்குள் நுழையும் தகுதி பெறவே குறைந்தது 3.25% ஓட்டு வாங்க வேண்டும். அதாவது குறைந்தது 4 சீட் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் காரணமாக இஸ்ரேலின் தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை எந்தவொரு கட்சியும் தனியாக 61 சீட் வாங்கி வெற்றி பெற்றதில்லை. 61 சீட் தான் மெஜாரிட்டி என்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்குப் பின்னர், அதிபர் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துப் பேசுவார். எந்தக் கட்சியால் 61 சீட் சேர்க்க முடியும் என்று கருதுகிறாரோ அந்தக் கட்சி ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார். பெரும்பாலும் அதிக சீட் வாங்கும் கட்சித் தலைவருக்கு தான் அந்த அழைப்பு விடுக்கப்படும். ஆனால், சில நேரங்களில் 2-வது இடம்பெறும் கட்சியைக் கூட அதிபர் ஆட்சியமைக்க அழைக்கலாம். அவ்வாறாக அழைக்கப்படுபவருக்கு 28 நாட்களும், தேவைப்பட்டால் அதன் பின்னர் கூடுதலாக 14 நாட்களும் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்குவார். ஒருவேளை அந்தக் கட்சியால் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாவிட்டால் மற்றொரு கட்சிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும். அவரும் நிரூபிக்காவிட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட 61 எம்.பி.க்கள் ஒன்றிணைந்து பொதுவாக ஒருவரை கைகாட்டினால் அவர் தலைமையில் அரசமைக்க அவகாசம் வழங்கப்படும். எதுவுமே ஒத்துவராத பட்டத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்படும். 2019 - 2022 ஆண்டுகளுக்கு இடையே இதுபோல் 5 முறை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடந்தது. அதனாலதான் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் வெளியானாலும் கூட ஆட்சி அமைய 50-லிருந்து 100 நாள் கூட ஆகும். அதனால்தான் அங்கு எப்பொழுதும் கூட்டணி ஆட்சியே நடைபெறுகிறது. நெதன்யாகுவுக்கான தீர்ப்பு? இஸ்ரேல் தேர்தல், அக்டோபர் 7, 2023 ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு நடைபெறும் முதல் தேசியத் தேர்தல் அது பெஞ்சமின் நெதன்யாகுவின் தலைமை மீதான பொது வாக்கெடுப்பாகவே பரவலாகப் பார்க்கப்பட்டது. அவரது கூட்டணிக்கு முன்னிலை கிடைத்திருக்கலாம். ஆனால், நெதன்யாகு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டார். எதிர்க்கட்சிகளும், அரபுக் கட்சிகளும் கணிசமான எண்ணிக்கையில் இடங்களை வைத்திருப்பதால், இறுதி முடிவு கூட்டணி பேச்சுவார்த்தைகள் மற்றும் எஞ்சியுள்ள சிறப்பு வாக்குகளைப் பொறுத்தே அமையும். தேர்தல் முடிவுகளைப் பொருத்தவரை நெருக்கமான போட்டி நிலவும் நிலையில், மற்றுமொரு தேர்தலை தவிர்க்குமாறு அரசியல் கட்சிகளுக்கு இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் வலியுறுத்தியுள்ளார். இரண்டு முக்கிய கூட்டணிகளுமே பெரும்பான்மையைப் பெறாத நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகளே புதிய அரசாங்கத்தை அமைக்க முடியுமா என்பதைத் தீர்மானிக்கும். அந்த நடைமுறை முடிவடையும் வரை நெதன்யாகு காபந்து பிரதமராக தொடர்வார். எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு இழுபறியான முடிவு, இஸ்ரேல் அதிபரின் அக்கறையும், கவலையும் கலந்த கருத்து என்று செல்லும் சூழலில் இஸ்ரேல் தேர்தலில் சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டு தலையீடு குறித்து உடனடியாகவும், பாரபட்சமின்றியும் விசாரணை நடத்த வேண்டும் என்று காடி ஐசென்கோட் வலியுறுத்தியுள்ளார். இந்தத் தேர்தலில் ஆரம்பம் முதலே நெதன்யாகவுக்கு ஆதரவாக அமெரிக்காவின் ஆர்வம் துருத்திக் கொண்டிருந்தது அனைவரும் அறிந்ததே. இதில் திகில் படத் திருப்பம் போல், இஸ்ரேல் தேர்தலில் கத்தார் மற்றும் துருக்கி போன்ற வெளிநாடுகள் சட்டவிரோதமாகப் பணம் கொடுத்து தலையிட்டதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பான 'ஷின் பெட்' (Shin Bet) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இது அந்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்தத் தேர்தலில் அரபுக் கட்சிகளின் வெற்றி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அமைந்துள்ளதே அதற்குக் காரணம். அரபுக்களின் தலைமையிலான ஜாயின்ட் லிஸ்ட் கூட்டணியின் தலைவர் யூசுப் ஜபரீன் அரபுக் கட்சிகள் தீர்மானிக்குமா? இஸ்ரேலிய தேர்தலில், ‘ஜாயிண்ட் லிஸ்ட்’ (Joint List) மற்றும் ‘யுனைடெட் அரபு லிஸ்ட்’ (United Arab List) ஆகிய அரபுக் கட்சிகள் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளதை கத்தாரின் முன்னாள் பிரதமர் பாராட்டியுள்ளார். “இந்தத் தேர்தல் வெற்றி, இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீன குடிமக்களிடையே, தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க வாழ்க்கைச் சூழலை மேம்படுத்த, தங்கள் சொந்த நிலத்தில் அமைதியுடன் வாழவும் கூடிய நம்பிக்கையை வலுப்படுத்த உதவும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலில் உள்ள அரபு மக்கள், தங்களை இஸ்ரேல் வாழ் பாலஸ்தீனர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் இந்தத் தேர்தலின் கிங் மேக்கராக இருக்கும் சூழலும் உருவாகியுள்ளது. இந்தநிலையில் பெஞ்சமின் நெதன்யாகு பகிர்ந்த பதிவில், “இஸ்ரேல் தேர்தலில் அரபுக் கட்சிகள் வெளிநாட்டு சதிகார கும்பலுடன் இணைந்து தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல், இதன் நோக்கம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தை வெளிநாட்டவர் கைப்பற்ற வழிவகுப்பது, இஸ்ரேலை இஸ்லாமியமயமாக்குவது மற்றும் வலதுசாரி ஆட்சியைக் கவிழ்ப்பது. ஈரான் போரில் இஸ்ரேலை தோல்வியடையச் செய்யவே இந்த சதி நடந்துள்ளது. வெளிநாட்டு சக்திகள் இஸ்ரேல் நாடாளுமன்றத்தை கைப்பற்ற முயன்றது தெளிவாக அம்பலமான பிறகு, எந்தவொரு சியோனிச கட்சியும் தி யுனைடட் அராப் லிஸ்ட்டுடன் ( Ra'am The United Arab List) ஒத்துழைக்கக்கூடாது. சபாநாயகரை மாற்றக்கூடாது. இஸ்ரேலில் ஆபத்தான அரசு அமையக்கூடாது என்பது தெளிவாகிறது” என்று நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். கத்தார் பணம், துருக்கி தலையீடு என குற்றச்சாட்டுகள் ஒருபுறம், அரபுக் கட்சிகளின் வரலாறு காணாத வெற்றி மறுபுறம் என இஸ்ரேல் தேர்தல் இப்போது தேர்தல் முடிவு என்பதைத் தாண்டி தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக மாறியுள்ளது. ஷின் பெட் விசாரணை என்ன சொல்லும், 61 என்ற மேஜிக் நம்பரை யார் தொடுவார் என்பதில்தான் அடுத்த அரசு இருக்கிறது. வெளிநாட்டு தலையீடு புகார், அரபுக் கட்சிகளின் எழுச்சி, மற்றும் நெதன்யாகு மீதான அதிருப்தி என மூன்று முனைகளில் இஸ்ரேல் அரசியல் சிக்கியுள்ளது என்று சர்வதேச புவி அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதிபர் ஹெர்சாக் யாருக்கு அழைப்பு விடுக்கிறார் என்பதைப் பொறுத்தே அடுத்த நகர்வு அமையும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை