இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை இல்லை! கிங் மேக்கராகும் அரபு கட்சிகள்! நெதன்யாகுக்கு தலைவலி

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை இல்லை! கிங் மேக்கராகும் அரபு கட்சிகள்! நெதன்யாகுக்கு தலைவலி

ஜெருசலேம்: இஸ்ரேல் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 100 சதவீதம் முடிந்துள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், 19 இடங்களை வென்றுள்ள அரபுக்கட்சிகள் கிங் மேக்கராக உருவெடுத்துள்ளன. பெஞ்சமின் நெதன்யாகு கட்சியின் கூட்டணி 53 இடங்களை வென்றுள்ள போதிலும் அவரால் ஆட்சி அமைக்க முடியுமா? என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 100 சதவீம் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. 120 இடங்களை கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 61 இடங்களில் வெற்றி பெறுவது அவசியம். வாக்கு எண்ணிக்கை முடிவில் இஸ்ரேலின் தற்போதைய பிரதமராக இருக்கக் கூடிய பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கிங் மேக்கராக அரபுக்கட்சிகள் காடி ஐசென்கோட் தலைமயிலான கூட்டணி 48 இடங்களில் வென்றுள்ளது. அரபுக்கட்சிகள் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அரபுக்கட்சிகள் கிங் மேக்கராக மாறியுள்ளன. நெதன்யாகுவின் முக்கிய அரசியல் போட்டியாளராக உள்ள காடி ஐசென்காட், சில நிபந்தனைகளுடன் அரபுக் கட்சிகளுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அரபுக் கட்சிகள் தலைமையிலான ஜாயிண்ட் லிஸ்ட் கூட்டணியின் இரண்டாவது இடத்தில் உள்ள அகமது திபி, நாடாளுமன்ற சபாநாயகரை மாற்றுவது குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிக் கூட்டணி தன்னைத் தொடர்புகொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சிக் கூட்டணியின் வேட்பாளருக்கு தங்களது கட்சி ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார். இதனால், அரபுக்கட்சிகளுடன் இணைந்து காடி ஐசென் காட் ஆட்சி அமைக்க தயாராகிறதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. ஒருவேளை இது நடந்தால் இஸ்ரேலின் தற்போதைய பிரதமராக இருக்கக் கூடிய பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பெரிய தலைவலியாக மாறும். நெதன்யாகு தனது பதவியை இழந்தால், அவருக்கு எதிராக பல்வேறு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படலாம். அதாவது, நெதன்யாகுவிற்கு எதிராக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை தொடங்கப்படலாம். மேலும், 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தலைமையில் நடத்தப்பட்ட கடுமையான தாக்குதலைத் தடுக்கத் தவறியது தொடர்பான பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து முறையான விசாரணை தொடங்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. புதிய அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இஸ்ரேலில் மீண்டும் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. அதுவரை பெஞ்சமின் நெதன்யாகுவே காபந்து அரசை கவனிப்பார். அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் வரும் நவம்பர் 4 ஆம் தேதி அறிவிக்கப்படும். அதன்பிறகே புதிய அரசு அமைக்க அந்த நாட்டின் அதிபர் அழைப்பு விடுப்பார். நெதன்யாகுவின் லிகுட் கட்சி 27 இடங்களைக் கைப்பற்றி, இஸ்ரேல் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருந்தாலும், அடுத்த ஆட்சியை அமைப்பதற்கான பெரும்பான்மை ஆதரவு அவருக்குக் கிடைக்குமா? என்பது தெரியவில்லை. 4 ஆம் தேதிக்கு பிறகு அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் இருக்கும் என்பதால், மொத்த நாடுகளும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை