இஸ்ரேல் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காதது பற்றி... இஸ்ரேல் தேர்தல் - AP இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான 99 சதவிகித வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில், எந்த கட்சியும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை. இந்த தேர்தலில் அரபு கட்சிகள் 19 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் கிங் மேக்கராக அவர்கள் உருவாகியுள்ளனர். மொத்தமுள்ள 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க 61 இடங்கள் தேவை என்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை (இந்திய நேரம்) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணி 53 இடங்களிலும், முன்னாள் ராணுவ தலைமை தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான எதிா்க்கட்சிக் கூட்டணி 48 இடங்களிலும், அரபு கட்சிகள் 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடர்பான புகார்கள், பிழைகள் போன்றவை திருத்தப்பட்டு, தேர்தல் முடிவுகள் வருகின்ற நவ. 4 ஆம் தேதி இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சோகிடம் சமர்ப்பிக்கப்படும். அதன்பின்னர், தோ்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, ஆட்சியமைக்கத் தகுதியான தலைவரை அதிபா் அழைப்பாா். புதிய பிரதமர் வருகின்ற நவ. 10 ஆம் தேதி பதவியேற்ற பிறகு, குறிப்பிட்ட காலத்துக்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இந்த நிலையில், தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் கிங் மேக்கராக அரபு கட்சிகள் உருவாகியுள்ளன. நெதன்யாகுவுக்கு எதிராக எதிா்க்கட்சிக் கூட்டணியும் அரபு கட்சிகளும் இணைந்தால் 67 உறுப்பினா்களின் ஆதரவுடன் புதிய அரசை அமைக்கும் வாய்ப்பு உள்ளது. எனினும், அரபு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து எதிா்க்கட்சி கூட்டணிக்குள் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. ‘அரபு கட்சிகளின் ஆதரவுடன் அமையும் எந்தவொரு அரசும் நாட்டுக்கு ஆபத்தானது’ என்று பெஞ்சமின் நெதன்யாகுவும் கடுமையாக எச்சரித்துள்ளாா். இஸ்ரேலில் தொங்கு நாடாளுமன்றம் உருவாகியிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகளிடையே தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஒருவேளை எந்தத் தலைவராலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், இஸ்ரேல் மீண்டும் ஒரு பொதுத்தோ்தலைச் சந்திக்க நேரிடும். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
இஸ்ரேல் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை! ‘கிங் மேக்கராக’ அரபு கட்சிகள்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗