இதயம் நின்றுவிட்டால் எவ்வளவு நேரம் சிபிஆர் செய்ய வேண்டும்? நேர வரம்பு இருக்கிறதா? 8 கேள்வி - பதில்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
இதயம் நின்றுவிட்டால் எவ்வளவு நேரம் சிபிஆர் செய்ய வேண்டும்? நேர வரம்பு இருக்கிறதா? 8 கேள்வி - பதில்

பட மூலாதாரம், Getty Images ஒருவரின் இதயம் திடீரென நின்றுவிட்டால், எத்தனை நிமிடங்கள் வரை உயிரைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்? 5 நிமிடங்களா? 10 நிமிடங்களா? அரை மணி நேரமா? சிபிஆர் எனப்படும் உயிர்காக்கும் முதலுதவிக்கு ஏதேனும் நேர வரம்பு இருக்கிறதா? 2012-ஆம் ஆண்டு 23 வயது ஃபேரிஸ் முவாம்பா என்ற போல்டன் கால்பந்து வீரர், போட்டியின்போது மைதானத்தில் திடீரென சரிந்து விழுந்தார். அவரது இதயம் துடிப்பதை நிறுத்தியது. சுமார் 78 நிமிடங்கள் தொடர்ச்சியாக சிபிஆர் மற்றும் மருத்துவ மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு அவர் உயிர் பிழைத்த சம்பவம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது. உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன், ஐரோப்பிய உயிர்ப்பிப்பு கவுன்சில் மற்றும் இந்திய சுகாதார அமைப்புகள் வலியுறுத்துவது என்னவென்றால், சிபிஆருக்கு ஒரு நிர்ணயிக்கப்பட்ட "நேர வரம்பு" இல்லை. ஒருவர் மீண்டும் சுவாசிக்கத் தொடங்கும் வரை, தானியங்கி வெளிப்புற டெஃபிப்ரிலேட்டர் (AED) பயன்படுத்தப்படும் வரை, அல்லது மருத்துவக் குழு பொறுப்பேற்கும் வரை சிபிஆர் தொடரப்பட வேண்டும். சிபிஆர் என்பது Cardiopulmonary Resuscitation என்பதன் சுருக்கம். இதயம் துடிப்பதை நிறுத்தியபோது அல்லது சுவாசம் நின்றபோது, மார்பின் நடுப்பகுதியில் தொடர்ச்சியான அழுத்தங்களை கொடுத்து, மூளை மற்றும் முக்கிய உறுப்புகளுக்கு குறைந்தபட்ச ரத்த ஓட்டத்தையும் ஆக்சிஜனையும் வழங்கும் அவசரகால உயிர்காக்கும் முறை. இதய நிறுத்தம் ஏற்பட்ட சில நிமிடங்களுக்குள், மூளைக்கு ஆக்சிஜன் செல்லவில்லை என்றால், மூளைச் செல்கள் பாதிக்கப்படத் தொடங்கும். உடனடியாக சிபிஆர் தொடங்கப்படும் போது உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கிறது. பட மூலாதாரம், Getty Images இந்திய மத்திய சுகாதார அமைச்சத்தின் வழிகாட்டுதலின்படி, நோயாளி உயிர் அறிகுறிகளை வெளிப்படுத்தும் வரை அல்லது மருத்துவ உதவி வரும் வரை சிபிஆரைத் தொடர வேண்டும். End of அதிகம் படிக்கப்பட்டது ஐரோப்பிய உயிர்ப்பிப்பு கவுன்சிலும் இதேபோன்ற கருத்தையே வலியுறுத்துகிறது. சிபிஆரை ஒரு குறிப்பிட்ட நிமிடத்தில் நிறுத்த வேண்டும் என்ற சர்வதேச விதி இல்லை. ஒவ்வொரு நோயாளியின் நிலைமையையும் சூழ்நிலையையும் பொருத்தே முடிவு செய்யப்படுகிறது. அதனால்தான் சில அரிய சம்பவங்களில் 60 நிமிடங்கள், 70 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் கூட உயிர்ப்பிக்கும் முயற்சிகள் தொடரப்பட்டுள்ளன. 78 நிமிடங்கள் கழித்தும் ஒரு வீரர் மீண்டிருப்பது அரிதானதுதான். ஆனால் மருத்துவ ரீதியாக சாத்தியமற்றது அல்ல. பிரிட்டிஷ் இதய நிறுவனத்தைச் சேர்ந்த காத்தி ராஸ், "சிபிஆரை ஆரம்பத்திலேயே மேற்கொள்வது, மருத்துவர்கள் நோயாளியை காப்பாற்ற தேவையான நேரத்தைப் பெற்றுத் தருகிறது. 78 நிமிடங்கள் என்பது நீண்ட நேரம்தான். ஆனால், மருத்துவ வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் கேள்விப்படாத ஒன்று அல்ல" என்று 2012-ல் பிபிசியிடம் தெரிவித்திருந்தார். பட மூலாதாரம், Getty Images பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு உடனே தொடங்குவது. இதய நிறுத்தம் ஏற்பட்ட பிறகு ஒவ்வொரு நிமிட தாமதமும் உயிர் பிழைக்கும் வாய்ப்பைக் குறைக்கிறது. இந்திய அரசின் தகவலின்படி, தாமதமான ஒவ்வொரு நிமிடத்துக்கும் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு சுமார் 10% வரை குறையக்கூடும். இருதயவியல் மருத்துவர் ரெஃபாய் சௌகத் அலி சிபிஆர் உடனே தொடங்குவது ஏன் முக்கியம் என்று விளக்குகிறார். "இதயம் நின்றவுடன் மூளைக்கு செல்லக் கூடிய ரத்த ஓட்டம் நின்றுவிடும். சிபிஆர் கொடுப்பதனால் சில நேரங்களில் இதயம் இயங்க தொடங்கினாலும், மூளையை மீண்டும் இயங்க வைக்க முடியாமல் போகும். அப்போது நோயாளி நிரந்தர கோமா நிலைக்கு செல்ல வாய்ப்புண்டு. எவ்வளவு முறையாக சிபிஆர் வழங்குகிறோம் என்பதை பொருத்தும் இது அமையும். பொது இடங்களில் இருப்பவர்கள் சிபிஆர் வழங்கும் போது, அது மருத்துவமனையில் வழங்குவது போன்று இருக்காது. தேவையான அளவு வலுவாக மார்பை அழுத்தாவிட்டால், மூளைக்கான ரத்த ஓட்டம் சீராகாது. மருத்துவமனையில் ரத்த அழுத்தம் உட்பட உடலின் பல முக்கிய சுட்டிகள் கண்காணிக்கப்பட்டுக் கொண்டே சிபிஆர் வழங்கப்படும்" என்கிறார் மருத்துவர் ரெஃபாய். பட மூலாதாரம், Getty Images மார்பு அழுத்தங்களை இடையில் அடிக்கடி நிறுத்தக்கூடாது. தொடர்ச்சியான, சரியான வேகத்தில் (நிமிடத்திற்கு 100-120 அழுத்தங்கள்) மார்பு அழுத்தங்களை வழங்க வேண்டும். தேவையற்ற இடைவெளிகள் ரத்த ஓட்டத்தை குறைத்து விடும். சிபிஆர் யாருக்கு கொடுக்கக் கூடாது என்று மருத்துவர் ரெஃபாய் சுட்டிக்காட்டுகிறார். "சாலை விபத்தில் அடிபட்டு மார்பு பகுதியில் காயம் ஏற்பட்ட ஒருவருக்கு சிபிஆர் வழங்கக் கூடாது. ஏற்கெனவே மார்பு எலும்புகள் சேதமடைந்திருக்கக்கூடும் என்று நபருக்கு சிபிஆர் வழங்குவது அவரது உடல்நிலையை மோசமாக்கிவிடும்" என்று எச்சரிக்கிறார். பாதிக்கப்பட்டவருக்கு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களால் உடனடியாக வழங்கப்படும் சிபிஆர் உயிர் பிழைக்கும் வாய்ப்பை 2 முதல் 3 மடங்கு வரை உயர்த்த முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் ஆதரிக்கும் சர்வதேச உயிர்ப்பிப்பு வழிகாட்டுதல்களும், ஆரம்பகட்ட சிபிஆர் மற்றும் விரைவான டெஃபிப்ரிலேஷன் (Rapid Defibrillation) ஆகியவை உயிர் பிழைப்பை அதிகரிக்கும் முக்கிய காரணிகள் எனக் கூறுகின்றன. விரைவான டெஃபிப்ரிலேஷன் என்பது இதயத் துடிப்பு ஆபத்தான முறையில் நின்றுவிட்டாலோ அல்லது ஒழுங்கற்ற நிலையில் இருந்தாலோ, டெஃபிப்ரிலேட்டர் கருவி மூலம் மின் அதிர்ச்சி கொடுத்து இதயத்தை மீண்டும் இயல்பாகத் துடிக்கச் செய்யும் நடவடிக்கையாகும். இதய நிறுத்தம் ஏற்பட்ட முதல் சில நிமிடங்களுக்குள் இதைச் செய்தால், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு கணிசமாக அதிகரிக்கும் என ஐரோப்பிய உயிர்ப்பிப்பு கவுன்சில் குறிப்பிடுகிறது. இதய நிறுத்தம் ஏற்பட்டால் உடனடி சிகிச்சை இல்லாமல் சில நிமிடங்களுக்குள் மரணம் ஏற்படலாம். இதயம் நின்றுவிட்ட நிலையில் மூளை மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு ரத்தம் செல்லாது. சிபிஆர், அந்த ரத்த ஓட்டத்தை தற்காலிகமாகத் தொடர்ந்து வைத்திருக்க உதவுகிறது. அதாவது, சிபிஆர் எல்லா நோயாளிகளையும் காப்பாற்றும் "அதிசய சிகிச்சை" அல்ல. ஆனால் உயிரைக் காப்பாற்றக்கூடிய வாய்ப்பை உருவாக்கும் முதல் மற்றும் மிக முக்கியமான நடவடிக்கை என மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன. மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில், "பொதுவாக 30 முதல் 45 நிமிடங்கள் வரை சிபிஆர் கொடுத்த பிறகும், பலன் இல்லை என்றால், அப்போது அடுத்த என்ன செய்யலாம் என்று யோசிப்போம். நோயாளியின் வயது, அவருக்கு ஏற்கெனவே இருதய பாதிப்புகள் இருக்கின்றனவா, இதய துடிப்பில் ஏதேனும் சில மாற்றங்களாவது தோன்றுகின்றனவா என்று பல காரணிகளை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையை முடிவு செய்வோம். இளம் வயதினருக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகம் என்பதால், அவர்களுக்கு அதிக நேரம் சிபிஆர் வழங்கப்படக்கூடும்" என்று கூறுகிறார் மருத்துவர் ரெஃபாய். அதே போல தண்ணீரில் மூழ்கியவர்களுக்கும் அதிக நேரம் சிபிஆர் வழங்கலாம் என்று அவர் குறிப்பிடுகிறார். "நீச்சல் குளத்தில் மூழ்கியவர்கள், குளங்கள், கிணறுகளில் விழுந்தவர்களுக்கு நீரை வெளியேற்ற நீண்ட நேரம் சிபிஆர் வழங்கலாம்" என்கிறார். இந்தியாவில் பொதுமக்கள் அளிக்கும் சிபிஆர் விகிதம் இன்னும் மிகவும் குறைவாக, 1.3% முதல் 9.8% வரையிலேயே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், அருகில் இருப்பவர்கள் வழங்கும் உடனடி சிபிஆர் உயிர் பிழைப்பு வாய்ப்பை 2 முதல் 3 மடங்கு வரை உயர்த்தக்கூடும். இதய நிறுத்தம் ஏற்பட்டவரின் உயிரைக் காப்பாற்றும் முதல் சில நிமிடங்களே உண்மையான பொன்னான நேரம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம், Getty Images மருத்துவர்களின் கூற்றுப்படி செய்ய வேண்டியவை என்ன? மருத்துவர்களின் கூற்றுப்படி செய்யக் கூடாதவை என்ன? - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை