இழுபறியில் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்: அரபுக் கட்சியின் ஆதரவை மறுத்த நெதன்யாகு!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
இழுபறியில் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்: அரபுக் கட்சியின் ஆதரவை மறுத்த நெதன்யாகு!

அரபுக் கட்சிகளின் ஆதரவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக நிராகரித்துள்ளதைப் பற்றி... இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு - கோப்புப் படம் அரபுக் கட்சிகளின் ஆதரவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். உலகமே எதிர்பார்த்த இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 99 சதவிகிதம் நிறைவடைந்த நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சார்ந்த லிகுட் கட்சி தலைமையிலான வலதுசாரி கூட்டணி 53 இடங்களிலும், முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான எதிா்க்கட்சிக் கூட்டணி 48 இடங்களிலும், அரபு கட்சிகள் 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் பதிவான 99 சதவிகித வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில், எந்த கட்சியும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை. மொத்தமுள்ள 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க 61 இடங்கள் தேவை என்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த தேர்தலில் அரபு கட்சிகள் 19 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் கிங் மேக்கராக அவர்கள் உருவாகியுள்ளயிருந்தாலும், கூட்டணி ஆட்சி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. நெதன்யாகுவுக்கு எதிராக எதிர்க்கட்சிக் கூட்டணியும் அரபு கட்சிகளும் இணைந்தால் 67 உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய அரசை அமைக்கும் வாய்ப்பு உள்ளது. எனினும், அரபுக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து எதிர்க்கட்சி கூட்டணிக்குள் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. இஸ்ரேலின் இறுதித் தேர்தல் முடிவுகள் நவ. 4 அன்று அதிபர் ஐசக் ஹெர்சாக்கிடம் சமர்ப்பிக்கப்படும். புதிய நெசெட் (நாடாளுமன்றம்) நவ. 10 அன்று பதவியேற்கும். அதன்பிறகு, 120 நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தது 61 பேரின் ஆதரவுடன் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார். அவ்வாறு தேர்வு செய்யப் படாவிடில், அடுத்தாண்டு மீண்டும் தேர்தல் நடத்தப்படும். நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டணியின் 53 மற்றும் அரபுக் கட்சியின் 19 இடங்களுடன் மொத்தமாக 72 பேரின் ஆதரவுடன் ஆட்சியமைக்கலாம் என்ற நிலையில், அரபுக் கட்சியின் ஆதரவை பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்திருக்கிறார். அதேநேரத்தில் வலதுசாரி கூட்டணியில் இருக்கும் தீவிர பழமைவாத யூதக் கட்சிகள் நெதன்யாகுவுடன் தொடர்ந்து இணைந்திருக்குமா? என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன. நெதன்யாகுவுக்கு எதிராக எதிர்க்கட்சிக் கூட்டணியும் அரபு கட்சிகளும் இணைந்தால் 67 உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய அரசை அமைக்கும் வாய்ப்பு உள்ளது. எனினும், அரபு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து எதிர்க்கட்சி கூட்டணிக்குள் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. Israeli Prime Minister Benjamin Netanyahu has reiterated his opposition to forming a government with Arab parties, declaring that it was “forbidden to form a government with them” in a video shared on X featuring remarks by Arab lawmakers backing the Palestinian cause. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை