ஜேஇஇ முதன்மைத் தேர்வு 2027 குறித்து முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்ட தேர்வு முகமை ஜேஇஇ முதன்மைத் தேர்வு - கோப்புப்படம் - ANI தேசிய தேர்வு முகமை நடத்தும் ஜேஇஇ முதன்மை 2027 முதல் அமர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்களின் சொந்த டிஜிட்டல் அடையாளச் சான்றுகளைப் பயன்படுத்துவது, டிஜிலாக்கர் மூலம் மறு-கேஒய்சி (Re-KYC) செயல்முறையை முடிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது- மேலும் மாணவர்கள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் 10-ஆம் வகுப்பு பதிவுகளுடன் பொருந்துகின்றனவா என்பதை உறுதி செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது, அடையாளத்மைத உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளை விரைவாக்க டிஜிலாக்கர் வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதுற்கு முன்பு, உங்கள் டிஜி லாக்கரில் கேஒய்சியை மீண்டும் புதுப்பித்து வைத்துக் கொள்ளுங்கள். மேலும் மாணவர்கள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் 10-ஆம் வகுப்பு பதிவுகளுடன் பொருந்துகின்றனவா என்பதை உறுதி செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஜேஇஇ தேர்வுகு jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும், இதில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களை மாணவர்கள் அறிந்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜேஇஇ முதன்மைத் தேர்வு 2027! முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்ட தேர்வு முகமை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗