ஜம்மு காஷ்மீரில் கவிழும் ஆட்சி? உமர் அப்துல்லாவிற்கு எதிராக 24 எம்எல்ஏக்கள் போர்க்கொடி.. பரபரப்பு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
ஜம்மு காஷ்மீரில் கவிழும் ஆட்சி? உமர் அப்துல்லாவிற்கு எதிராக 24 எம்எல்ஏக்கள் போர்க்கொடி.. பரபரப்பு

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ஆதரவில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா முதல்வராக இருக்கிறார். சமீபத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் அவரது கட்சியை சேர்ந்த 24 எம்எல்ஏக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். முதல்வர் உமர் அப்துல்லாவிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளதால் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி கவிழ்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 2024ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. அங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி 42 தொகுதிகளிலும், பாஜக 29 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. மெகபூபா முப்தியின் ஜேகேபிடிபி கட்சி 3, ஜேபிசி 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று வெற்றி பெற்றது. மீதமுள்ள இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். தற்போது உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சிக்கு 41 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சி ஆதரவில் ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கெடுக்காமல் வெளியில்இருந்து ஆதரவு வழங்கி வருகிறது. இதனால் உமர் அப்துல்லா தனது 41 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்களின் ஆதரவில் மெஜாரிட்டியான 46 இடத்தை தாண்டி 47 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்றார். அதன்பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு எம்எல்ஏ, சுயேச்சை மற்றும் சிறிய கட்சிகளை சேர்ந்த 5 எம்எல்ஏக்களும் உமர் அப்துல்லாவிற்கு ஆதரவு அளித்தனர். இதனால் அவருக்கு சட்டசபையில் 53 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது. இதனால் எந்த பிரச்சனையும் இன்றி உமர் அப்துல்லா கடந்த 2 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வந்தார். இந்நிலையில் தான் கடந்த 27 ம் தேதி உமர் அப்துல்லா தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். ஜம்மு காஷ்மீரில் முதல்வர் உள்பட மொத்தம் 9 பேர் மட்டுமே அமைச்சரவையில் இடம்பெற முடியும். காலியாக இருந்த 4 இடங்களுக்கு புதியவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இந்த அமைச்சரவை விரிவாக்கத்தை தொடர்ந்து தான் முதல்வர் உமர் அப்துல்லா மீது 24 எம்எல்ஏக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அவர்கள் முதல்வர் உமர் அப்துல்லாவிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இந்த அமைச்சரவை விரிவாக்கத்தை தொடர்ந்து தான் முதல்வர் உமர் அப்துல்லா மீது 24 எம்எல்ஏக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். உமர் அப்துல்லாவிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். நேற்றைய தினம் மாலையில் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் 18 பேர் எம்எல்ஏ கைசர் ஜம்ஷித் லோன் என்பவரின் வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த மீட்டிங்கில் 6 எம்எல்ஏக்கள் வீடியோ காலில் இணைந்தனர். இதன்மூலம் 24 எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர். இவர்கள் நடத்திய மீட்டிங்கில் 2 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். ஒன்று முதல்வர் உமர் அப்துல்லா தனது ஆலோசகர் நசீர் அஸ்லாம் வானியை நீக்க வேண்டும். 2வது துணை முதல்வர் சுரீந்தர் சவுத்ரி உள்பட சில அமைச்சரர்களை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இதுபற்றி அதிருப்தி எம்எல்ஏ ஒருவர் கூறுகையில், ''நாங்கள் முதல்வரை சந்தித்து எங்களின் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்புகிறோம். நாங்கள் கட்சிக்கு எதிரானவர்கள் இல்ல. ஆனால் வழக்கம்போல் எங்களால் செயல்பட முடியாது. இதனால் முதல்வர் ஙெ்களின் கருத்துகளை கேட்டு கட்சி மற்றும் அரசின் நலனுக்காக சில மாற்றங்களை செய்ய வேண்டும்'' என்று கூறினார். உமர் அப்துல்லாவிற்கு ஏற்கனவே தனி மெஜாரிட்டி இல்லை. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சுயேச்சைகள் மற்றம் சில சிறிய கட்சிகளின் ஆதரவில் தான் ஆட்சியை நடத்தி வருகிறார். இப்படி இருக்கும்போது உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த 24 எம்எல்ஏக்கள் அதிருப்தியாகி உள்ளனர். இவர்கள் விலகினால் தேசிய மாநாட்டு கட்சி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 41ல் இருந்து 17 ஆக குறையும். இதனால் ஆட்சி கவிழும் நிலை வரலாம். தற்போது வரை அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆட்சி மாற்றம், ராஜினாமா பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும் கூட அவர்களின் அதிருப்தி கடுமையாக உள்ளதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை