ஜம்மு-காஷ்மீரில் மசூதி மீது கல்வீச்சு: 4 பேர் கைது

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
ஜம்மு-காஷ்மீரில் மசூதி மீது கல்வீச்சு: 4 பேர் கைது

ஜம்மு-காஷ்மீரில் மசூதி மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து.... ஜம்மு-காஷ்மீர். - கோப்புப்படம். ஜம்மு-காஷ்மீரில் மசூதி மீது கல்வீசியதாக 4 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரின் ஷெர்பாக் பகுதியில் உள்ள பெஹ்ரூ என்ற இடத்தில் அமைந்த மசூதியில் சிலர் ஞாயிற்றுக்கிழமை மாலை தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சமூக விரோதிகள் சிலர் மசூதி மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக 4 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவத்திற்கு மதச்சாயம் பூச வேண்டாம் என்றும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர். இதுகுறித்து திங்கள்கிழமை அதிகாரி ஒருவர் கூறுகையில், "வழிபாட்டுத் தலமாக மாற்றப்பட்ட ஒரு வீட்டில் தொழுகை நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. மாலை தொழுகையின் போது சில சமூக விரோதிகள் கல்வீசியதில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது. காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்" என்று தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை