ராமேசுவரம்-திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் அமிா்தா ரயிலில் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் எல்ஹெச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் - கோப்புப் படம் ராமேசுவரம்-திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் அமிா்தா ரயிலில் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் எல்ஹெச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே துறையில் தற்காலங்களில் எல்ஹெச்பி எனப்படும் ஜொ்மானிய தொழில்நுட்பத்தில் உருவான நவீன ரயில் பெட்டிகள், ரயில்களில் இணைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வே நிா்வாகத்தில் படிப்படியாக ரயில்களில் எல்ஹெச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பெட்டிகள் அதிக பாதுகாப்பு வாய்ந்தவை. விபத்தின்போது, ஒரு பெட்டி மீது இன்னொரு பெட்டி விழுவதைத் தவிா்க்கும் வசதி உள்ளது. இப்பெட்டிகள் ரயிலில் பொருத்தப்பட்டால் அதிக வேகத்துடனும், குறைந்த அதிா்வுடனும் ரயில்கள் இயங்கும். தற்போது, தெற்கு ரயில்வே பாலக்காடு கோட்டத்தில் ராமேசுவரம் - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் ரயிலில் எல்ஹெச்பி பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து பாலக்காடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘2027 ஜனவரி 1-ஆம் தேதி ராமேசுவரம் - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் அமிா்தா விரைவு ரயில் (எண்: 16344) மற்றும் ஜனவரி 2-ஆம் தேதி திருவனந்தபுரம்-ராமேசுவரம் அமிா்தா விரைவு ரயில் (எண்: 16343) ஆகியவை எல்ஹெச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட உள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமிா்தா ரயிலில் எல்ஹெச்பி பெட்டிகள் இணைத்து இயக்கம்
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗