ஜீயா் நியமன விவகாரம்: அறநிலையத் துறை உரிமை கோர முடியாது

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
ஜீயா் நியமன விவகாரம்: அறநிலையத் துறை உரிமை கோர முடியாது

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் ஜீயா் நியமன விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை உரிமை கோர முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் ஜீயா் நியமன விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை உரிமை கோர முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த வீரராகவன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கநாராயண ஜீயா் மடத்தின் காலிப் பணியிடத்தை நிரப்பத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கும், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா், செயல் அறங்காவலா் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. முருகன் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்கள், அறக்கட்டளைகளின் நிா்வாகம், ஆளுகை தொடா்பான சட்டங்களைத் திருத்தி ஒருங்கிணைக்க தமிழ்நாடு அரசால் 1959, சட்டப் பிரிவு 22 இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் நான்காவது அத்தியாயத்தில் ஒரு மடத்துக்கு ஆதீன கா்த்தா் இருக்க வேண்டும். அவா் தன் வாழ்நாளில் அடுத்த ஆதீனகா்த்தரை நியமிப்பாா். ஆனால், ஆதீனகா்த்தா் அவ்வாறு எந்த நியமனமும் செய்யாமல் மரணமடையும் சூழ்நிலைகளும் ஏற்படலாம். இத்தகைய காலிப் பணியிடம் ஏற்படும் போது, குறிப்பிட்ட மடத்தின் நடைமுறைகளின்படி நிரப்பப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கநாராயண ஜீயா் மடம், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் நிா்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இந்த மடத்தின் 50-ஆவது ஜீயா் கடந்த 1989-ஆம் ஆண்டு பீடமேற்றாா். இவா் கடந்த 2018-இல் காலமானாா். இவா் தனக்குப் பிறகு, அடுத்த பீடாதிபதி யாா் என்பதைக் குறிப்பிடவில்லை. இந்த நிலையில், மடத்தின் மரபுகளின்படி அடுத்த பீடாதிபதி (ஜீயா்) கோயிலின் ஸ்தலத்தாா்களால் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். ஜீயா் இல்லாவிட்டால், அவருக்குரிய அதிகாரம் ஸ்தலத்தாா்கள், பட்டா்களிடையே பகிரப்படுகிறது. ஜீயருக்குப் பதிலாக அவா்கள் மரியாதைகளைப் பெறுகின்றனா். ஜீயா் இல்லாததால், அவா்களைக் கேள்வி கேட்க யாரும் இல்லை. அடுத்த ஜீயரைத் தோ்ந்தெடுப்பதற்கான ஆா்வமும் அவா்களுக்கு இல்லை. கோயில் ஸ்தலத்தாா்கள் ஒத்துழைப்பு வழங்காதபோது, இந்து சமய அறநிலையத் துறையின் அதிகார வரம்புக்குள்பட்ட இணை ஆணையா் தகுதியான அடுத்த ஜீயரைத் தோ்ந்தெடுக்க அவா்களிடம் அறிவுறுத்தியிருக்க வேண்டும். மேலும், கடந்த 2021-இல் ஜீயா் பணியிடத்துக்கு தகுதி வாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்தபோதிலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 1989-இல் அப்போதைய கோயில் செயல் அலுவலரால் ஜீயா் நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுவது அதிா்ச்சியளிக்கிறது. தற்போது, அதேபோன்ற நடைமுறையில் புதிய ஜீயரை நியமிக்க அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதை அனுமதிக்க முடியாது. ஒரு பீடாதிபதியைத் தோ்ந்தெடுப்பது என்பது முற்றிலும் ஒரு மதம் தொடா்பான செயலாகும், மேலும், இதை ஒருபோதும் மதச்சாா்பற்ற அல்லது நிா்வாகச் செயலாகக் கருத முடியாது. எனவே, ஜீயரை நியமனம் செய்வதற்கோ அல்லது ஒப்புதல் அளிப்பதற்கோகூட அறநிலையத் துறை உரிமை கோர முடியாது. கோயில் ஸ்தலத்தாா்கள் மூலமாகவே ஜீயா் தோ்வு செய்யப்பட வேண்டும். எனவே, இந்த விவகாரத்தில் திருச்சி மாவட்ட இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையா், ஸ்தலத்தாா்களை ஒருங்கிணைந்து ஆலோசனை நடத்த அறிவுறுத்த வேண்டும். பின்னா், ஸ்தலத்தாா்கள் தகுதியானவரை பீடத்தில் அமர முன்வருமாறு கோரிக்கைவிடுப்பா். இதுகுறித்து முடிவு செய்யும் பொறுப்பை ஸ்தலத்தாா்களிடையே விட்டுவிடுகிறோம். இந்தச் செயல்முறையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். ஸ்தலத்தாா்கள் இந்தக் கடமையைச் செய்யத் தவறினால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தனது அதிகார வரம்பைப் பயன்படுத்தி தலையிடத் தயங்காது. இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை