தவெக அரசு மற்றும் அமைச்சர்கள் மீது எதிர்க்கட்சிகள் பொய்க் குற்றச்சாட்டுகள் வைப்பதாக அமைச்சர் கீர்த்தனா குற்றம் சாட்டியது குறித்து... அமைசச்ர் கீர்த்தனா - கோப்புப் படம் தவெக அரசு மற்றும் அமைச்சர்கள் மீது எதிர்க்கட்சிகள் பொய்க் குற்றச்சாட்டுகள் வைப்பதாக அமைச்சர் கீர்த்தனா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து விருதுநகரில் செய்தியாளர்களுடன் அமைச்சர் கீர்த்தனா பேசியதாவது, "பெண்களுக்காக முதல்வர் விஜய் பல திட்டங்களைக் கொண்டு வருகிறார். தவெகவினர் மீது தொடர்ந்து பொய்க் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. இவ்வாறு பொய்க் குற்றச்சாட்டுகளால், தவெகவினர் சோர்வடைந்து வீட்டுக்குள் இருந்து விடுவேன் என நிறைய பேர் நினைக்கின்றனர். ஆனால், எனக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது. ஆட்சிக்கு வந்த 4 மாதங்களிலேயே குற்றச்சாட்டு வைப்பதற்குக் காரணம், அவர்களுக்கு இருக்கும் பயம்தான். அவர்கள் எத்தனை குற்றச்சாட்டுகள் வைத்தாலும், நான் தொடர்ந்து பயணித்துக் கொண்டுதான் இருக்கிறேன். எதிர்க்கட்சிகள்தான் தமிழ்நாட்டை பின்நோக்கித் தள்ளிக்கொண்டு இருக்கின்றனர். பாராட்டவில்லை என்றாலும், பொய்க் குற்றச்சாட்டுகளால் ஒருவரை முடக்கப் பார்க்காதீர்கள். இப்படித்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் செய்தீர்கள். இருப்பினும், அவர் வெகுண்டெழுந்து வந்தார். அவரைப் போல் நாங்கள் வெகுண்டெழுவோம்" என்று தெரிவித்தார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜெயலலிதாவை போல் நாங்களும் வெகுண்டு எழுவோம்: அமைச்சர் கீர்த்தனா
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗