ஜெயிலுக்கு போகும் நெதன்யாகு.. இஸ்ரேல் தேர்தலில் நடக்கப்போகும் பெரிய டிவிஸ்ட்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
ஜெயிலுக்கு போகும் நெதன்யாகு.. இஸ்ரேல் தேர்தலில் நடக்கப்போகும் பெரிய டிவிஸ்ட்!

டெல் அவிவ்: இஸ்ரேலில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கையில், நெதன்யாகு ஜெயிப்பார் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஒருவேளை, அவர் தோற்றுவிட்டால் நிச்சயம் ஜெயில்தான். அவர்மீது ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பிரதமர் என்பதால் இந்த வழக்குகளின் விசாரணை மெதுவாக நடக்கிறது. எனவே அவர் தோல்வியடைந்துவிட்டால், விசாரணைகள் சூடுபிடித்து.. அவர் ஜெயிலுக்கு அனுப்பப்பட வாய்ப்பு இருக்கிறது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு கினெசெட் என்று பெயர். இதில் மொத்தம் 120 இடங்கள் இருக்கின்றன. ஜெயிக்க வேண்டும் எனில் 61ல் பெரும்பான்மை பெற வேண்டும். தற்போது தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஏறத்தாழ 90 சதவிகதத்திற்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டுவிட்டன. நெதன்யாகுவின் லிகுட் கட்சி, அதற்கு ஆதரவளித்துள்ள மற்ற கூட்டணி கட்சிகள் என எல்லாம் சேர்த்தே 53 இடங்க தாண்டவில்லை. எதிர்க்கட்சியிலும் இதே நிலைமைதான். 'யாஷர்' என்பதுதான் எதிர்க்கட்சியின் பெயர். இதன் தலைவர் 'காடி ஐசன்கோட்'! இவர் முன்னாள் ராணுவ தளபதியாவார். இந்த கட்சியை பற்றியும் சொல்வதற்கு பெருசா ஒன்னும் இல்லை. சிம்ப்ளி வேஸ்ட். ரெண்டு கட்சிகளும் காசா படுகொலைகளை ஆதரிக்கும் கட்சிகள்தான். இருந்தும் கூட, இந்த கட்சியும் 48 இடங்களை தாண்டவில்லை. இது ரெண்டும் இல்லாமல் 3வதாக ஒரு கூட்டணி இருக்கிறது. அரபு கட்சிகளின் கூட்டணிதான் இது. இந்த கட்சிகள் 19 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய சாதனை படைத்திருக்கின்றன. வண்டினு இருந்தா.. ரெண்டு மாடுதான்! 3 மாடு இருந்தா எப்படி வூடு போய் சேருவது? இஸ்ரேலின் கதை இப்படித்தான் இருக்கிறது. நெதன்யாகு பிரதமராக மீண்டும் வருவது காடி ஐசன்கோட்டுக்கு பிடிக்காது. சரி நெதன்யாகு இறங்கி வரலாம் என்று நினைத்தால்.. மக்கள் இந்த முடிவை ஏற்க மாட்டார்கள். ஒரே ஆப்ஷன் அரபு கட்சிகளின் ஆதரவை கேட்பதுதான். அது மட்டும் நடந்தால்.. மக்கள் நெதன்யாகுவை டம்மியாக நினைத்துவிடுவார்கள். எனவே அவர் பிரதமராக நீடிப்பதில் சிக்கல் இருக்கிறது. இப்போது நடப்பதை பார்த்தால் நெதன்யாகு பதவியை இழக்கும் நிலை வரலாம். அது மட்டும் நடந்தால்.. அவர் மீது இருக்கும் ஊழல் வழக்குகள் மீதான விசாரணை சூடுபிடிக்கும். இஸ்ரேல் உச்சநீதிமன்றத்தில் 1000, 2000 மற்றும் 4000 என்கிற பிரிவில் நெதன்யாகு மீது கடந்த 2020 முதல் ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் பிரதமராக இருப்பதால் இந்த வழக்குகள் பெரிய அளவில் விசாரிக்கப்படவில்லை. நெதன்யாகுவின் பிரதமர் பதவி காலியானால்.. விசாரணை சூடுபிடிக்கும். ஒவ்வொன்றும் நல்ல ஷார்ப்பான வழக்கு.. மாட்டினால் நிச்சயம் சிறைதான் என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதுபோக, நெதன்யாகு மீது சர்வதேச நீதிமன்றத்தில் பிடி வாரண்ட்டும் இருக்கிறது. எனவே அரபு கட்சிகள், பாலஸ்தீன ஆதரவு நாடுகள் என அனைத்தும் எப்போடா நெதன்யாகு காலியாவார் என்று எதிர்பார்த்திருக்கின்றன. அது மட்டும் நடந்தால் மொத்தமாக கதை முடிந்த என்பது குறிப்பிடத்தக்கது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை