ராக்கெட், செயற்கைக்கோள் மாதிரியை திருப்பதியில் வைத்து இஸ்ரோ தலைவர் தரிசனம் செய்தது பற்றி... ஜிஎஸ்எல்வி-எஃப் 18 மாதிரியைத் திருப்பதியில் வைத்து இஸ்ரோ தலைவர் தரிசனம் - ANI நாளை விண்ணில் ஏவப்படவுள்ள ஜிஎஸ்எல்வி-எஃப் 18 ராக்கெட்டின் மாதிரியை திருப்பதியில் வைத்து இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் சாமி தரிசனம் செய்தார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப் 18 ராக்கெட் நாளை (அக். 30) இரவு 11.51-க்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. சுமாா் 50 மீட்டா் உயரமும் 420 டன் எடையும் கொண்ட மூன்று அடுக்கு ஜிஎஸ்எல்வி ராக்கெட், 2,250 கிலோ எடை கொண்ட என்விஎஸ்-03 செயற்கைக்கோளைப் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் (ஜிடிஓ) நிலைநிறுத்தவுள்ளது. ‘நேவிக்’ எனப்படும் இந்தியாவின் வழிகாட்டல் அமைப்பின் சேவைகள் தடையின்றித் தொடா்வதை உறுதிசெய்யும் பொருட்டு இந்தச் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான துல்லியமான இருப்பிடம், வழிகாட்டல் மற்றும் நேர சேவைகளை இந்த செயற்கைக்கோள் வழங்கும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிதுல்லிய அணு கடிகாரம் அதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், என்விஎஸ்-03 செயற்கைக்கோள் திட்டம் வெற்றியடைய வேண்டி, திருப்பதியில் இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் உள்ளிட்டோர் ராக்கெட் மாதிரியை வைத்து இன்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்த நாராயணன் பேசியதாவது: “ஜிஎஸ்எல்வி-எஃப் 18 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளோம். இது இந்தாண்டின் 5-வது ராக்கெட் திட்டமாகும். ஏற்கெனவே, 3 வழிகாட்டல் அமைப்பு செயற்கைக்கோள் (நேவிகேஷன்) இருக்கும் நிலையில், தற்போது நான்காவது செயற்கைக்கோள் நேவிகேஷனுக்காக அனுப்பப்படுகிறது. இது, இந்தியாவின் பிஎன்டி சேவைகளுக்காக அனுப்பப்படுகிறது. ககன்யான் திட்டத்துக்கான பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. 8,000 பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதில், நமது விண்வெளி வீரர்களை அனுப்பவுள்ளதால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறோம். ககன்யான் திட்டதில் வீரர்களை அனுப்புவதற்கு முன்னதாக, 3 ராக்கெட்டுகள் ஆளில்லாமல் அனுப்பப்படும். முதல் ராக்கெட்டை இந்தாண்டுக்குள் அனுப்பவுள்ளோம்” எனத் தெரிவித்தார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜிஎஸ்எல்வி-எஃப் 18 மாதிரியைத் திருப்பதியில் வைத்து இஸ்ரோ தலைவர் தரிசனம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗