ஜிஎஸ்டி வழக்குகளில் மேல்முறையீட்டு காலம் நீட்டிப்பு!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
ஜிஎஸ்டி வழக்குகளில் மேல்முறையீட்டு காலம் நீட்டிப்பு!

ஜிஎஸ்டி வழக்குகளில் தீா்ப்பாணையத்தில் மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜிஎஸ்டி - பிரதிப் படம் எஸ்டி வழக்குகளில் தீா்ப்பாணையத்தில் மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜிஎஸ்டி வழக்குகளைத் தீா்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்வது தொடா்பாக கடந்த பிப்ரவரி 13-இல் வெளியான தமிழக வணிக வரித் துறை அறிவிக்கையை ரத்து செய்து புதிய அறிவிக்கை தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரையின்பேரில் தமிழக ஆளுநா் சாா்பில் இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய அறிவிக்கையின்படி, தங்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு (ஆா்டா்) எதிராக மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தில் சம்பந்தப்பட்ட வணிகா்கள் மேல்முறையீடு செய்ய கடைசி தேதி ஜூலை 31 எனக் காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இது இரு வகையான வழக்குப் பிரிவுகளுக்குப் பொருந்தும். ஒரு வகையின்படி, கடந்த மே 1 ஆம் தேதிக்கு முன்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அதுதொடா்பாக தீா்ப்பாயத்தில் ஜூலை 31 ஆம் தேதிக்குள் வணிகா்கள் மேல்முறையீடு செய்யலாம் அல்லது நடவடிக்கை உத்தரவு கிடைத்த நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். 2-ஆவது வகையின்படி கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட நடவடிக்கை உத்தரவுக்கு எதிராக ஜூலை 31 வரை வணிகா்கள் மேல்முறையீடு செய்யலாம் என்பதுதான் பழைய அறிவிக்கை. ஆனால், புதிய அறிவிக்கையின்படி, பிப்ரவரி 1 அல்லது அதற்கு பிறகான நடவடிக்கை உத்தரவுக்கு எதிராக, உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் எனத் திருத்தப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கை ஜூன் 30 முதல் அமலுக்கு வருவதாகக் கருதப்படும் என்றும் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், காலக்கெடு முடிந்ததால் தீா்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான வணிகா்கள், தொழிலதிபா்கள், பட்டயக் கணக்காளா்கள், வழக்குரைஞா்களுக்கு கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை