ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 13.7 சதவீதம் உயர்ந்ததையடுத்து அதன் பங்குகள் 3 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தன. புதுதில்லி: ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் 2வது காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 13.7 சதவீதம் உயர்ந்ததையடுத்து அதன் பங்குகள் 3 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தன. மும்பை பங்குச் சந்தையில், இந்தப் பங்கு 3.14 சதவீதம் உயர்ந்து ரூ. 1,476.15 ஐ எட்டியது. நிஃப்டி-யில் இந்தப் பங்கு 3 சதவீதம் உயர்ந்து ரூ. 1,475 ஐ எட்டியது. சந்தாதாரர் அதிகரிப்பு, தனி நபர் பயனருக்கான வருவாய் மற்றும் டிஜிட்டல் சேவைகளில் ஏற்பட்ட ஆரோக்கியமான வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் செப்டம்பர் உடன் நிறைவடைந்த அதன் 2வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 13.7 சதவீதம் உயர்ந்து ரூ. 8,389 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது. ஆய்வுக்குட்பட்ட காலாண்டில், டிஜிட்டல் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாய் 11.4 சதவீதம் உயர்ந்து ரூ. 40,475 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த வாரத் தொடக்கத்தில் நிறுவனம் பிரம்மாண்டமாகப் பட்டியலிடப்பட்ட பிறகு, செப்டம்பர் காலாண்டுக்கான அதன் நிதிநிலை முடிவுகள் வெளியாகியுள்ளன. நிறுவனத்தின் உரிமையாளர்களுக்குச் சேர வேண்டிய நிகர லாபம், கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.7,379 கோடியாக இருந்த நிலையில், நடப்பு காலாண்டில் ரூ.8,389 கோடியாக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஜூன் வரையான காலாண்டில் இருந்த ரூ. 7,765 கோடியிலிருந்து 8% உயர்ந்த நிலையில் அதன் செயல்பாடுகளின் மூலம் கிடைத்த வருவாய் ரூ. 39,173 கோடியிலிருந்து 3.3% அதிகரித்துள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் Q2 லாபம் 13.7% அதிகரிப்பு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗