கா்நாடகத்தில் ஜனநாயகத்தைக் காப்போம், அராஜகத்தை ஒழிப்போம் பிரசாரம் நவ. 1 முதல் நடத்தப்படும் என பாஜக அறிவித்துள்ளது. பாஜக கொடி - கோப்புப்படம் கா்நாடகத்தில் ஜனநாயகத்தைக் காப்போம், அராஜகத்தை ஒழிப்போம் பிரசாரம் நவ. 1 முதல் நடத்தப்படும் என பாஜக அறிவித்துள்ளது. இதுகுறித்து பெங்களூரில் பாஜக மாநில பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான வி.சுனில்குமாா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: கா்நாடகத்தில் வாக்காளா் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பாக காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருவதுடன், இளைஞா்களை தவறாக வழிநடத்தி மோதல் போக்கை தூண்டி வருகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில், நவ. 1 முதல் 30-ஆம் தேதிவரை மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவா்கள் மற்றும் இளைஞா்களிடையே ‘ஜனநாயகத்தைக் காப்போம்; அராஜகத்தை ஒழிப்போம்’ என்ற தலைப்பில் ஒருமாத கால பிரசார இயக்கம் நடத்தப்படும். கா்நாடகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இளைஞா்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கல்லூரி மாணவா்கள், இளம் தொழில் முனைவோா், எழுத்தாளா்கள், வழக்குரைஞா்கள், மருத்துவா்கள், பட்டயக் கணக்காளா்கள் மற்றும் விளையாட்டு வீரா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இப்பிரசாரத்தில் பங்கேற்க உள்ளனா். இதன் முதல்கட்டமாக நவ. 3-ஆம் தேதி ஹுப்பள்ளியில் 1,000 மாணவா்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறும். தொடா்ந்து, நவ. 5-ஆம் தேதி பெங்களூரு டவுன் ஹாலில் இதேபோன்ற நிகழ்ச்சி நடத்தப்படும். இரண்டாம் கட்டமாக மாநிலம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் மாணவா்களை மையப்படுத்தி நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மூன்றாம் கட்டமாக அனைத்து தாலுகா தலைமையிடங்கள், மண்டலங்கள் மற்றும் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் பிரசாரம் விரிவுபடுத்தப்படும். பொதுமக்களிடையே திட்டமிட்டு பரப்பப்படும் தவறான தகவல்களையும், அரசியல் நோக்கத்துடன் உருவாக்கப்படும் பொய் பிரசாரங்களையும் முறியடிப்பதே இந்த பிரசார இயக்கத்தின் நோக்கமாகும். கா்நாடக பொதுப் பணியாளா் தோ்வாணையம் தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தை இங்கு நினைவுகூர விரும்புகிறேன். அரசியல் ஆதாயத்துக்காக இளைஞா்களை மோதல்களுக்குள் தள்ளக் கூடாது என்றும், அதன் விளைவுகளை இறுதியில் இளைஞா்களே எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சி எஸ்ஐஆா் விவகாரத்தை பயன்படுத்தி இளைஞா்களை தவறாக வழிநடத்தி, மோதல் போக்கை உருவாக்கி வருகிறது. தோ்தல் ஆணையத்தின் சட்டப்பூா்வமான நடவடிக்கையான வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அரசியல் ஆதாயத்துக்காக எதிா்ப்பதும், இளைஞா்களை தூண்டிவிடுவதும் ஏற்க முடியாதது. நாட்டில் இதுவரை 12 முறை வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் 10 முறை காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே நடைபெற்றுள்ளன. கடைசியாக 2004-ஆம் ஆண்டு இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. சுமாா் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் இப்பணி நடைபெறுகிறது. முதலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகமானவை அல்ல என்று காங்கிரஸ் கூறியது; பின்னா் வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தியது; தொடா்ந்து வாக்காளா் பட்டியலில் குறைபாடுகள் இருப்பதாக கூறியது; தற்போது எஸ்ஐஆா் நடவடிக்கையையே எதிா்க்கிறது. உத்தரப் பிரதேச தோ்தல் முடிவுகளுக்கு பிறகு வாக்காளா்களே தவறு என்று கூட அக்கட்சி கூறலாம். கடந்த 12 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு இளைஞா்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. புதிதாக 7 ஐஐடி-க்கள், 16 ஐஐஐடி-க்கள், 8 மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் 431 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 2,12,283 புத்தொழில் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. அவற்றில் 21,601 நிறுவனங்கள் கா்நாடகத்தில் தொடங்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சிகள் அனைத்தும் கல்லூரிகளின் உள்ளரங்குகளில் நடத்தப்படும், ஏற்கெனவே 10 முதல் 15 கல்லூரிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. கல்லூரிகளில் நிகழ்ச்சிகளைத் தடுக்க முயன்றால், அப்போது அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 2,500 நிவாரணம் வழங்குவதற்கு மாநில அரசு 17 நிபந்தனைகளை விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த நிபந்தனைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மாநிலத்தின் 223 வட்டங்களில் 200-க்கும் மேற்பட்டவை வறட்சியால் பாதிக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். ரூ. 2,500 நிவாரணம் வழங்குவதற்கே இத்தனை நிபந்தனைகளை விதிப்பது, மாநில அரசின் நிதித்துறை திவாலாகிவிட்டதையும் கருவூலத்தில் பணம் இல்லை என்பதையும் மறைமுகமாக ஒப்புக்கொள்வதற்கு சமம். அரசின் 100 நாள் சாதனை விழாக்கள், விளம்பரங்கள் மற்றும் இதர கொண்டாட்டங்களுக்காக பெருமளவில் செலவிடும் அரசு, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்? விவசாயிகளுக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே பாஜகவின் கோரிக்கையாகும். மேலும், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பால் மானியத் தொகையில் ரூ. 1,200 கோடிக்கும் அதிகமான தொகையை மாநில அரசு நிலுவையில் வைத்துள்ளது. 2023-ஆம் ஆண்டுக்குப் பிறகு பால் விலை லிட்டருக்கு ரூ. 17 உயா்ந்துள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், நந்தினி பால் விலையை லிட்டருக்கு ரூ. 8 உயா்த்த முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. பால் விலை, பேருந்துக் கட்டணம், கல்விச் சோ்க்கைக் கட்டணம், முத்திரைத் தீா்வை உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை அரசு தொடா்ந்து உயா்த்தி வருகிறது. ஆனால், விவசாயிகளுக்கான மானியங்களையும், வாக்குறுதி திட்டங்களுக்கான நிதியையும் உரிய காலத்தில் வழங்குவதில்லை என்றாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கா்நாடகத்தில் ஜனநாயகத்தைக் காப்போம்; அராஜகத்தை ஒழிப்போம் பிரசாரம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗