காங்கிரஸ் உருவாக்கிய வங்கிகளை மோடி விற்கிறார்! ராகுல் காந்தி

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
காங்கிரஸ் உருவாக்கிய வங்கிகளை மோடி விற்கிறார்! ராகுல் காந்தி

ஐடிபிஐ வங்கி விற்பனைக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி... ராகுல் காந்தி - ANI காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட வங்கிகளை மோடி விற்பனை செய்கிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மத்திய அரசு மற்றும் எல்ஐசி வசமுள்ள ஐடிபிஐ வங்கியின் 60.72 சதவிகித பங்குகளை கனடாவின் ஃபோ்ஃபாக்ஸ் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 52,878 கோடிக்கு விற்பனை செய்வதற்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசும் எல்ஐசியும் இணைந்து வங்கியின் மீதமுள்ள 34 சதவிகித பங்குகளைத் தொடா்ந்து தங்கள் வசம் தக்க வைத்திருக்கும். அனைத்து பரிவர்த்தனைகளும் முடிந்தவுடன் வங்கியின் முழு நிர்வாகமும் ஃபோ்ஃபாக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஐடிபிஐ வங்கியின் ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்திருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அரசை விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது: ”காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், நாட்டின் தொழில்துறையை கட்டமைப்பதற்காக ஐடிபிஐ வங்கி நிறுவப்பட்டது. மோடி ஆட்சிக் காலத்தில், முதலில் ஏல நடைமுறை மேற்கொள்ளப்பட்டது, அதன் பிறகு விலை நிர்ணயிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வங்கிகள் உருவாக்கப்பட்டன. மோடி ஆட்சிக் காலத்திலோ அவை விற்கப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஐடிபிஐ வங்கி ஊழியர்களுக்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: “2003-ஆம் ஆண்டில், ஐடிபிஐ வங்கியில் எப்போதும் குறைந்தது 51 சதவீத பங்குகளைத் தன் வசம் வைத்திருப்பதாக அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு வாக்குறுதி அளித்தது. இது எழுத்துப்பூர்வமாக அளிக்கப்படாத வாக்குறுதியாக இருக்கலாம், ஆனால் நாடாளுமன்றத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி என்பது இந்திய மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியாகும். ஐடிபிஐ வங்கி தனியார்மயமாக்கப்பட்டால், அதனுடன் சேர்ந்து எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டு உரிமையும் பறிபோய்விடும். ஏற்கனவே பலவீனமடைந்துள்ள உங்கள் பணி நிபந்தனைகள், தங்களுக்கு இருந்த கடைசிப் பாதுகாப்பையும் இழந்துவிடும். தனியார் துறைக்கு இணையாக, வலுவான பொதுத்துறை இருக்க வேண்டும் என்பதே காங்கிரஸின் கொள்கை. பொதுத்துறை வங்கிகள் என்பவை விற்பனை செய்யப்பட வேண்டிய சொத்துக்கள் அல்ல; அவை தேசத்தைக் கட்டமைப்பதற்கான கருவிகள். உங்களின் இன்றைய போராட்டத்துக்கு நான் உறுதுணையாக நிற்கிறேன். உங்கள் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் முழுமையாக ஆதரிக்கிறேன். ஒன்றிணைந்து இருங்கள். உறுதியுடன் செயல்படுங்கள். ஜெய் ஹிந்த்” என்று குறிப்பிட்டுள்ளார். ஏா் இந்தியா விற்பனைக்குப் பிறகு நாட்டின் மிகப் பெரிய பங்கு விலக்கலாகவும், பொதுத் துறை வங்கிகள் தனியாா்மயமாக்கல் நடவடிக்கையில் புதிய தொடக்கமாகவும் இது பாா்க்கப்படுகிறது. à¤à¤¾à¤à¤à¥à¤°à¥à¤¸ à¤à¥ समय मà¥à¤ IDBI बना - दà¥à¤¶ à¤à¤¾ à¤à¤¦à¥à¤¯à¥à¤ à¤à¤¡à¤¼à¤¾ à¤à¤°à¤¨à¥ à¤à¥ लिà¤à¥¤à¤®à¥à¤¦à¥ à¤à¥ समय मà¥à¤ पहलॠबà¥à¤²à¥ दà¥à¤à¥ à¤à¤, फिर दाम तय हà¥à¤à¥¤à¤à¤¾à¤à¤à¥à¤°à¥à¤¸ à¤à¥ time पॠबà¥à¤à¤ बनतॠथà¥à¥¤ मà¥à¤¦à¥ à¤à¥ time मà¥à¤ बिà¤à¤¤à¥ हà¥à¤à¥¤à¤®à¥à¤ IDBI बà¥à¤à¤ à¤à¥ à¤à¤°à¥à¤®à¤à¤¾à¤°à¤¿à¤¯à¥à¤ à¤à¥ साथ à¤à¤¡à¤¼à¤¾ हà¥à¤à¥¤ https://t.co/6dIok1fxV1 pic.twitter.com/uLT7mWTYyr தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை