காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,570-ஐ கடந்துள்ளது குறித்து... இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன சிறுவனின் உடலுடன் அவரது தாயார்... - AP காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,550-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவில், பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களான ஹமாஸ் படைகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த 2023 அக்டோபர் மாதம் போர் தொடங்கியது. இந்தப் போரில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். பின்னர், இருதரப்புக்கும் இடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2025 அக்டோபர் மாதம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டுவரப்பட்ட பிறகும் காஸா மீது இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், அங்குள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அகதி முகாம்கள் குறிவைத்துத் தாக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், காஸாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரைக் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 74,570 ஆக அதிகரித்துள்ளதாக, காஸாவின் சுகாதார அமைச்சகம் இன்று (அக். 29) அறிவித்துள்ளது. இத்துடன், இஸ்ரேலின் தாக்குதல்களில் படுகாயமடைந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,75,808 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்களால் 6 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 38 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு காஸாவில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு நடத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதல்களால் 1,574 பேர் கொல்லப்பட்டதுடன், 5,687 பேர் படுகாயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 74,570 பாலஸ்தீனர்கள் பலி!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗