காஷ்மீரில் குழந்தையை நெஞ்சோடு கட்டிக்கொண்டு இந்த தாய் மாரத்தான் ஓடியது ஏன்?

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
காஷ்மீரில் குழந்தையை நெஞ்சோடு கட்டிக்கொண்டு இந்த தாய் மாரத்தான் ஓடியது ஏன்?

பட மூலாதாரம், BASIT ZARGAR/BBC ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடைபெற்ற அரை மாரத்தான் ஓட்டத்தில், தனது குழந்தையை உடலோடு கட்டிக்கொண்டு ஒரு பெண் ஓடத் தொடங்கியது, பலரது கவனத்தை ஈர்த்தது. குல்சூம் பானோ மாரத்தான் ஓடிய புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆனால், 34 வயதான அவர் மாரத்தானில் பங்கேற்க முடிவெடுத்ததற்குப் பின்னால் ஒரு கதையும், அவரது விடாமுயற்சியும் இருக்கின்றன. அக்டோபர் 25-ஆம் தேதி ஸ்ரீநகரில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் இரண்டு பிரிவுகள் இடம்பெற்றன. 42.195 கிலோமீட்டர் தொலைவுக்கான முழு மாரத்தான் மற்றும் 21 கிலோமீட்டர் தொலைவுக்கான அரை மாரத்தான் ஆகியவை நடைபெற்றன. இந்த மாரத்தான் போட்டியில் 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஸ்ரீநகரில் உள்ள போலோ மைதானத்தில் இருந்து போட்டியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். குஜராத்தின் சூரத் மாவட்டத்தைச் சேர்ந்த குல்சூம் பானோ, தற்போது ஸ்ரீநகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். 2012-ஆம் ஆண்டு பந்திபோரா மாவட்டத்தின் குரேஸ் பகுதியைச் சேர்ந்த இம்தியாஸ் லோனைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்பு குல்சூம் தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். ராணுவத்தில் சேர வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. சிஆர்பிஎஃப் வீரரான இம்தியாஸ் லோன் தற்போது அருணாச்சலப் பிரதேசத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக மூன்று குழந்தைகளையும் தனியாக வளர்த்து வருவதால் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகக் குல்சூம் கூறுகிறார். குல்சூமின் இளைய குழந்தைக்கு ஒரு வயது, மகளுக்கு இரண்டு வயது, மூத்த மகனுக்கு 12 வயது. குழந்தைகளை வளர்ப்பதில் தனது சொந்த ஆசைகளை இழந்துவிட்டதாக அவர் கூறுகிறார். End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு "என் கணவர் பணியில் இருந்ததால், எனது இரண்டு குழந்தைகளும் நான் தனியாக இருந்தபோது பிறந்தன. சில நேரங்களில் என் மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. எனக்கும் ஆசைகளும் கனவுகளும் இருந்தன. ஆனால், குழந்தைகளுக்காக அவற்றைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தது," என்று அவர் கூறினார். குல்சூம் ஸ்ரீநகரில் உள்ள ஒரு கிளப்பில் பகுதி நேர உடற்பயிற்சிப் பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார். அவரது மூத்த மகன் அப்துல்லா இம்தியாஸ் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் அதே கிளப்பில் ஸ்கேட்போர்டிங் பயிற்சி பெற்று வருகிறார். குல்சூம் தினமும் அதிகாலை மூன்று மணியளவில் எழுந்துவிடுவதாக கூறினார். ''ஒரு குழந்தை தூங்கிக்கொண்டிருக்கும்போது, மற்றொரு குழந்தை விளையாடும் நேரமாக இருக்கும்; இன்னொரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தயாராகும். இவற்றுக்கு இடையில், எனக்காகச் சிறிது நேரம் கிடைக்கும். அந்த நேரத்தை எனக்காக வாழ்கிறேன்," என்று குல்சூம் கூறுகிறார். ஒரு துணை ராணுவ வீரரின் மனைவியின் வாழ்க்கை போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்தது என்று குல்சூம் கூறுகிறார். மற்றவர்கள் வெளியில் தெரிவதை மட்டுமே பார்க்கிறார்கள்; ஒருவர் என்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதில்லை என்றும் அவர் கூறுகிறார். "வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு என் கஷ்டங்கள் புரியாது. அவர்கள் போர்வீரர்கள் என்றால், நானும் ஒரு போர்வீரர்தான். உலகத்தையும், சமூகத்தையும், என்னையும் எதிர்த்துப் போராடுகிறேன். மனைவியாகவும், தாயாகவும், பெண்ணாகவும் எல்லாவற்றையும் தனியாகச் செய்வது கடினம். இத்தனை சவால்களுக்கு மத்தியிலும் மாரத்தானில் பங்கேற்க எனக்கு மிகுந்த துணிச்சல் தேவைப்பட்டது," என்று குல்சூம் கூறுகிறார். மாரத்தானில் பங்கேற்க முடிவு செய்தது குறித்து குல்சூம் கூறுகையில், "என் நண்பர் அப்துல்லா, பயிற்சியாளர் சஜ்ஜாத் ஆகியோரின் ஆலோசனையின்படி, போட்டிக்கு முந்தைய நாள் மாரத்தானில் பங்கேற்கப் பதிவு செய்தேன். இதை என் கணவரிடம் சொல்லவில்லை. அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க விரும்பினேன். என் புகைப்படங்களும் வீடியோக்களும் அவரைச் சென்றடையும் என நம்பினேன்," என்று குல்சூம் கூறினார். குல்சூமின் பயிற்சியாளர் சஜ்ஜாத் அகமது கான் ஒரு கிளப்பை நடத்தி வருகிறார். தனது மகன் ஸ்கேட்போர்டிங் பயிற்சிக்கு வந்தபோது அவர் குல்சூமைச் சந்தித்ததாக கூறுகிறார். "எங்கள் கிளப்பில் நிகழ்ச்சிகள் நடக்கும்போதெல்லாம், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வேறு யாரும் இல்லாததால், குல்சூம் தனது குழந்தையையும் அழைத்து வருவார். அவருடைய திறமையை நான் அறிந்துகொண்டதால் , அவர் மாரத்தானில் பங்கேற்க வேண்டும் என்று நினைத்தேன்," என்கிறார் பயிற்சியாளர் சஜ்ஜாத் அகமது கான். ஆனால், போட்டி நடந்த அன்று காலை, தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மாரத்தானில் பங்கேற்பது கடினம் என்று குல்சூம் அவரிடம் கூறினார். "என்னால் மாரத்தானை முடிக்க முடியாது என்று நினைத்தேன். ஆனால், அப்துல்லா தனது தங்கையைப் பார்த்துக்கொள்வதாகக் கூறினார். மாரத்தானைவிட நீங்கள் எனக்கு முக்கியம் என்றும் அவர் சொன்னார்," என்கிறார் குல்சூம். இதற்குப் பிறகு, தனது இளைய மகனுக்கு வெதுவெதுப்பான ஆடைகளை அணிவித்து, குழந்தை சுமக்கும் பை மூலம் அவரைத் தன்னுடன் கட்டிக்கொண்டு போட்டி நடந்த இடத்திற்குச் சென்றதாக குல்சூம் கூறுகிறார். தனது மகன் அமைதியாக இருந்ததால், மாரத்தானில் ஓடுவதில் எந்தச் சிரமமும் ஏற்படவில்லை என்று குல்சூம் கூறுகிறார். மாரத்தானைப் பார்க்க வந்தவர்களும் அவரை உற்சாகப்படுத்தி, தொடர்ந்து ஓடுமாறு ஊக்கமளித்தனர். "பசியால் என் மகன் அழத் தொடங்கியபோதுதான் எனக்குக் கஷ்டமாக இருந்தது. அதனால், ஸ்ரீநகரின் லால் சௌக் பகுதியில் உள்ள கடிகாரக் கோபுரம் அருகே நின்று அவனுக்கு பால் கொடுத்தேன். இதனால் நான் மற்றவர்களைவிடப் பின்தங்கினேன். போட்டியை முடிக்க முடியுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. ஆனால், என் குழந்தைதான் எனக்கு முக்கியம். மற்றதெல்லாம் அதற்குப் பிறகுதான். என் மகன் அமைதியாக இல்லாமல் இருந்திருந்தால், நான் போட்டியிலிருந்து விலகியிருப்பேன். அவனுக்கு எந்தக் கஷ்டத்தையும் கொடுக்க நான் விரும்பவில்லை," என்று குல்சூம் கூறுகிறார். "என்னால் போட்டியை முடிக்க முடிந்ததற்கு 99 சதவீதம் என் மகனின் அமைதிதான் காரணம். என் முயற்சி ஒரு சதவீதம் மட்டுமே," என்று குல்சூம் கூறுகிறார். சுமார் மூன்று மணி நேரத்தில் போட்டியை முடித்த குல்சூமின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதற்கு ஆதரவும் விமர்சனமும் எழுந்தன. சிலர் குல்சூமைப் பாராட்டினர். மற்றவர்கள், இவ்வாறு செய்ததன் மூலம் அவர் தனது குழந்தையை ஆபத்தில் ஆழ்த்தியதாகக் கூறினர். இதற்கு பதிலளித்த குல்சூம், "என்னை விமர்சிப்பவர்களிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நான் எந்தக் கட்டாயத்தினாலும் இதைச் செய்யவில்லை. ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் பங்கேற்றேன். நான் முதலில் ஒரு தாய். நான் என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை," என்கிறார். குல்சூமின் பயிற்சியாளர் கான் கூறுகையில், "அவர் விளம்பரத்திற்காக இப்படிச் செய்ததாகச் சிலர் விமர்சித்தனர். ஆனால், தனது மகனைத் தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது. மற்றவர்களைப் பற்றி எளிதாகக் கருத்துச் சொல்லிவிடுகிறார்கள். குல்சூம் நலமாக இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்த, போட்டி முழுவதும் அவருடன் நடந்து சென்றேன்," என்றார். "ஒவ்வொரு விஷயத்திலும் இரண்டு பக்கங்கள் இருக்கும். எதையும் விமர்சிப்பதற்கு முன், இரு தரப்பு நிலைகளையும் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்." இந்த மாரத்தானைத் தனது குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பார்கள் என்று குல்சூம் கூறுகிறார். "என் குழந்தைகள் பலவீனமாக இருக்கக் கூடாது. கடினமான சூழ்நிலைகளையும் சமாளிக்கக் கற்றுக்கொள்ளும் வகையில் அவர்களை வளர்க்கிறேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. ஆனால், என் குழந்தைகள் மனதளவிலும் உடலளவிலும் வலிமையாக இருக்க வேண்டும்," என்கிறார் குல்சூம். மூன்று குழந்தைகளுக்குத் தாயான தன்னால் ஒரு மாரத்தானில் பங்கேற்க முடியும் என்றால், மற்ற பெண்களாலும் பங்கேற்க முடியும் என்ற செய்தியை அவர்களுக்குச் சொல்வதும் மாரத்தானில் பங்கேற்றதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்று குல்சும் கூறினார். "குழந்தைகள் பிறந்த பிறகு தங்களுடைய வாழ்க்கையே முடிந்துவிட்டதாகச் சில பெண்கள் நினைக்கிறார்கள். நம்மால் வேறு எதுவும் செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் குழந்தைகளுடன் விளையாட்டுகளில் ஈடுபடுவது அல்லது பிற செயல்பாடுகளில் பங்கேற்பதன் மூலம் நம்முடைய மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் நம் குழந்தைகள், குடும்பம் அல்லது சமூகத்திற்காக நம்மால் செய்ய முடிந்ததைச் செய்யலாம்" என்கிறார் குல்சும். "குழந்தைகளிடம் நம்முடைய குழந்தைப் பருவத்தைக் காண முடியும். நம்முடைய சிறுவயதில் செய்ய முடியாமல் போன விஷயங்களை, அவர்கள் மூலம் பார்த்து அனுபவிக்கவும் முடியும்." இந்தப் போட்டியில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 1,221 வீரர்களும், இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த 513 வீரர்களும், 12 நாடுகளைச் சேர்ந்த 73 சர்வதேச வீரர்களும் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில் கென்யாவைச் சேர்ந்த இம்மானுவேல் சிகுகு நதிவாவும், பெண்கள் பிரிவில் அதே நாட்டைச் சேர்ந்த ஷீலா ஜெப்கோஸ்கெய் செசாங்கும் முழு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை