சன்னரக நெல் சாகுபடியில் முன்னேறிய காவிரி டெல்டா பற்றி.. காவிரி டெல்டா பாசன பகுதிகளில் நடப்பு சம்பா பருவத்தில் 65 சதவீத அளவிற்கு சன்னரக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் வினோத் பேட்டியளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் சிறப்பு மளிகை தொகுப்பு வழங்கும் திட்டத்தினை வேளாண் துறை அமைச்சர் வினோத் இன்று துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், நடப்பு சம்பா பருவத்தில் காவிரி சமவெளி மாவட்டங்களில் 65 சதவீத அளவிற்கு சன்னரக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் வட்டத்தில் 2,500 ஹெக்டேர் பரப்பிற்கு சன்ன ரக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆடுதுறை 51, 54, 58, 61 என்ற ரகங்கள் சன்ன ரகத்தில் உள்ளது. மேலும் அதி சன்ன ரகம் நெல் சாகுபடி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைப்பதில்லையே? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
காவிரி டெல்டா பகுதியில் 65% சன்னரக நெல் சாகுபடி! அமைச்சர் வினோத் தகவல்
📅
📍 Thanjavur, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗