சீன் திரைப்படத்தின் கேரள வெளியீடு குறித்து... நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சீன் திரைப்படம் கேரளத்தில் அதிக திரைகளில் வெளியாகவுள்ளது. நடிகர் சூர்யா ழகரம் ஸ்டூடியோஸ் என்கிற புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இதன் முதல் தயாரிப்பாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சீன் திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படம் நவ. 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு வெற்றியை இப்படம் மூலம் பெற வேண்டும் என்பதைத் தாண்டி புதிய தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படத்தை வெற்றியுடன் ஆரம்பிக்க வேண்டும் என சூர்யா காத்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையைப் பெற்ற ஸ்ரீ கோகுலம் மூவிஸ் அதிக திரைகளில் இதனை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாம். காரணம், ஆவேஷம் திரைப்படத்தால் ஜித்து மாதவன் மீதும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதைவிட, கருப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெற்றிகளால் சூர்யாவின் ரசிகர்களும் இப்படத்திற்காகக் காத்திருக்கின்றனர். நாயகி நஸ்ரியா இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் உள்பட படக்குழுவினர் பலரும் மலையாளிகள் என்பதால் மலையாளத் திரைப்படம் வெளியாவதற்கு இணையான திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாம். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கேரளத்தில் அதிக திரைகளில் வெளியாகும் சீன்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗