கள்ள உறவால் தாம்பத்தியத்துக்கு மறுத்த மனைவி.. விவாகரத்து கோரிய கணவருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
கள்ள உறவால் தாம்பத்தியத்துக்கு மறுத்த மனைவி.. விவாகரத்து கோரிய கணவருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தாம்பத்திய உறவுக்கு மறுத்ததால் சந்தேகமடைந்த கணவர் அவரிடம் விவாகரத்து கோரினார். இந்த வழக்கு விசாரணையின்போது அவர் ஏற்கனவே நண்பரை ரகசியமாக திருமணம் செய்ததும், இதனல் தான் கணவருடன் தாம்பத்தியத்துக்கு மறுத்ததும் தெரியவந்ததால் நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கி அதிரடியாக உத்தரவிட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வசித்து வரும் இளைஞருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அதன்பிறகு கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அடிக்கடி சண்டை நடந்து வந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ தொடங்கினர். கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 27 ம் தேதி ஜெய்ப்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கணவர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தனது மனைவி 4 ஆண்டுகளாக தன்னுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட மறுத்ததாகவும் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதுதொடர்பாக மனுவில், ''எனது மனைவிக்கும், இன்னொரு ஆணுக்கும் பழக்கம் உள்ளது. இருவரும் நண்பர்கள் என்று என் மனைவி கூறினார். ஆனால் அவளது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. 'கர்வா செளத்' பண்டிகை நாளில் என் மனைவி அவளது நண்பனுக்காக விரதம் இருப்பார். கைகளில் மருதாணியால் அவரது பெயரை எழுதி கொள்வார். இதனால் இருவருக்கும் கள்ளத்தொடர்பு உள்ளது. அந்த நபரையே என் மனைவி கணவராக ஏற்றுக்கொண்டுள்ளார். இதனால் தான் 'கர்வா சொளத்' (கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக மனைவி விரதம் கடைப்பிடிக்கும் தினம்) நாளில் அந்த நபரை நினைத்து விரதம் கடைப்பிடித்தார். அதுமட்டுமின்றி 2019ம் ஆண்டில் இருந்தே என் மனைவி தாம்பத்தியத்துக்கு மறுத்து வருகிறார். இதனால் மனரீதியாக கொடுமையை அனுபவிக்கிறேன். விவாகரத்து வழங்க வேண்டும்'' என கூறியிருந்தார். இந்த மனுகுடும்ப நல நீதிமன்றம் -2ல் நீதிபதி விஷால் பார்கவா முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது நீதிபதி, ''நண்பர் என சொல்லும் நபருக்காக 'கர்வா செளத்' விரதம் இருப்பது, அவரது பெயரை மருதாணியால் கைகளில் எழுதி கொள்வது உள்ளிட்டவை அந்த நபரை முழுவதுமாக தனது கணவராக ஏற்றுக்கொண்டு செயல்படுவது போன்ற செயலாகும். இது மனுதாரருக்கு கொடுக்கும் மனரீதியான கொடுமையாக அமைந்துள்ளது. இதுபோன்ற செயல்கள் என்பது ஒரு ஆண், பெண்ணுக்கு இடையேயான சாதாரண நட்பை தாண்டிய செயலாக அமைந்துள்ளது'' என்று நீதிபதி கூறினார். இதையடுத்து அந்த பெண் தரப்பு, ''நான் என் கணவருக்கு தெரியாமல் எனது நண்பருடன் உறவில் இருக்கிறேன். நாங்கள் இருவரும் கோவாவில் திருமண சடங்குகளும் செய்துது விட்டோம். இதனால் தான் 'கர்வா செளத்' விரதம் கடைப்பிடித்தேன்'' என்று கூறினார். இதன்மூலம் அவரது கணவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம், ''இன்னொருவரை திருமணம் செய்து கொண்டு கணவரை ஏமாற்றி அவருடன் வாழ்வது, கணவருடன் தாம்பத்திய உறவுக்கு மறுப்பது உள்ளிட்டவை மனரீதியான கொடுமை'' என்று கூறிய நீதிபதி தம்பதியின் 13 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு விவாகரத்து வழங்கி முற்றுப்புள்ளி வைத்தார். மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்ட நபருக்கு விவாகரத்து வழங்கி அதிரடியாக உத்தரவிட்டார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை