கள்ளக்காதலர்களுக்குள் தகராறு! தட்டி கேட்ட காதலியின் சின்ன மாமனார்! அடித்தே கொன்ற லாரி டிரைவர் கைது

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
கள்ளக்காதலர்களுக்குள் தகராறு! தட்டி கேட்ட காதலியின் சின்ன மாமனார்! அடித்தே கொன்ற லாரி டிரைவர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே கள்ளக்காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறை தட்டி கேட்ட முதியவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்றதாக லாரி ஓட்டுநர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கந்திலியை அடுத்த டி. வீரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த கரியன் மகன் நந்தியப்பன் (50) என்பவர் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ரோஜா என்கிற பெண்ணுக்கும், நந்தியப்பனுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனைத் தொடர்ந்து ரோஜாவிற்கும், நந்தியப்பனுக்கும் இடையே கடந்த 23-ஆம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை ரோஜாவின் சின்ன மாமனாரான அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமியின் மகன் செல்வம் (60) என்பவர் தட்டிக் கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நந்தியப்பன் இரும்பு ராடால் முதியவர் செல்வத்தை தாக்கியுள்ளார்.இதில் காயமடைந்த செல்வம் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். எனினும் கடந்த 25ஆம் தேதி அவர் திடீரென உயிரிழந்துள்ளார். இதையடுத்து முதியவரின் உறவினர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கந்திலி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்த முதியவரின் செல்வத்தின் உடலை மீட்டு‌ பிரோத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த கந்திலி போலீசார் நந்தியப்பன் மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை