கமல் ஸ்ரீதேவி திரைப்படத்தின் போஸ்டர்... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவாகும் கமல் ஸ்ரீதேவி திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரபுதேவா - சிம்ரன் ஜோடி பல ஆண்டுகளுக்குப் பின் தற்போது மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் கிருஷ்ணானந்த் கொட்டராப்பட்டு இயக்கும் இந்தப் படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிட்டுள்ளனர். காதல் திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். டூரிஸ்ட் ஃபேமிலி, மண்டாடி படங்களில் நடித்த மிதுன் ஜெய் சங்கர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் 5வது படம் இது. தீபாவளியை முன்னிட்டு இப்படத்தின் சிறப்பு போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கமல் ஸ்ரீதேவி தீபாவளி சிறப்பு போஸ்டர்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗