நாகா்கோவில் அருகே கணவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட தவெக பெண் நிா்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா். கொலை... - சித்திரிப்பு நாகா்கோவில் அருகே கணவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட தவெக பெண் நிா்வாகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா். நாகா்கோவிலை அடுத்த இறச்சகுளம் பூங்காநகா் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (எ) சுரேஷ் (43). இவரது மனைவி பாரதி(36). இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். பாரதி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தவெக மகளிா் அணி இணை அமைப்பாளராக இருந்து வந்தாா். இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி சுரேஷ் தனது வீட்டில் மயங்கி கிடந்தாா். அவரை அவரது மனைவி மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சுரேஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, அவரது சடலத்தை போலீஸாா் மீட்டு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உடல் கூறாய்வில், சுரேஷ் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும், போலீஸாரின் விசாரணையில், சுரேஷை அவரது மனைவியே கொலை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து பாரதி, அவரது 13 வயது மகன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இந்நிலையில் தவெகவில் இருந்து பாரதி நீக்கப்பட்டுள்ளாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கணவா் கொலை வழக்கில் கைதான தவெக பெண் நிா்வாகி கட்சியிலிருந்து நீக்கம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗