கண்ணுக்குள் வேரூன்றி முளைத்த விதை! ரஷிய மனிதருக்கு நேர்ந்த துயரம்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
கண்ணுக்குள் வேரூன்றி முளைத்த விதை! ரஷிய மனிதருக்கு நேர்ந்த துயரம்!

கண் திசுக்களில் வேரூன்றி முளைத்த விதையால் ரஷிய மனிதருக்கு நேர்ந்த துயரம் பற்றி.. பாதிக்கப்பட்ட கண் - பிரதி படம் - கோப்புப்படம். வீடுகளில் மண்ணை நிரப்பி விதைப் போட்டு தண்ணீர் ஊற்றினால் வளராத செடி, எதிர்பாராதவிதமாக ஒருவர் கண்ணுக்குள் சென்று முளைக்கத் தொடங்கியிருக்கும் அதிசயம் நிகழ்ந்துள்ளது. ரஷியாவின் யகுடியா மாகாணத்தைச் சேர்ந்த 42 வயது மனிதருக்குக் கண் பார்வையில் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்ற போது, அவரது கண்ணை சோதித்த மருத்துவருக்குக் கடும் அதிர்ச்சி. அவரது கண்ணில் பார்வைக் குறைபாடோ சதை அல்லது புரையோ வளர்ந்திருக்கவில்லை. மாறாக, நான்கு மாதங்களுக்கு முன்பு, ஏதோ ஒரு வழியில் கண்ணுக்குள் நுழைந்த ஒரு விதை, அவரது கண் திசுக்களில் தன்னுடைய வேரைப் பரப்பி, செடியாக வளர தொடங்கியிருந்ததைப் பார்த்த மருத்துவர் நிச்சயம் மயக்கமடைந்திருக்க வாய்ப்பு அதிகம். மக்ஸிம் ஸ்லெப்சோவ்-விடம் இது பற்றி விசாரித்த போது, கோடைக்கால விடுமுறையைக் கழிக்க வனப்பகுதிக்குள் சுற்றுலா சென்றிருந்தபோது, ஒரு செடியின் கிளை அவரது கண்களில் குத்தியிருக்கிறது. அப்போதிருந்து கண்ணில் எரிச்சல், வலி இருந்துள்ளது. கண்ணுக்குள் பட்ட செடியின் ஒரு குச்சியை வெளியே எடுத்திருந்த போதும், யாருக்கும் தெரியாமல், அந்த குச்சியைப் பயன்படுத்தி கண்ணுக்குள் நுழைந்த ஒரு விதை, நிரந்தரமாக அங்கேயே பதுங்கிக் கொண்டது. குச்சியை அகற்றிய பிறகும் கண்களில் வலி, எரிச்சல், கடும் தலைவலி ஏற்பட்டிருக்குகிறது. இதற்கும், அந்த குச்சிதான் காரணம் என்ற நினைத்திருக்கிறார். ஆனால், குச்சி பாவம், அதுதான் வெளியே வந்துவிட்டதே. பிறகு மருத்துவமனையை நாடி முறைப்படி சோதனை செய்திருக்கிறார். அப்போதுதான், கண்ணின் வெள்ளை திசுக்களை ஒட்டிப் பிடித்திருந்த விதையானது, ஏன் சும்மா இருக்க வேண்டும்? அப்படியே வளர்ந்து செடியாகிவிடலாமே, இடம் பாதுகாப்பானதாகவும் இருக்கிறதே, தேவைப்பட்டால் கண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்ததோ என்னவோ, வேர்களை ஊன்றி விதை முளைத்து இரண்டு இலையும் விட்டிருக்கிறது. பூ மலர்வதற்குள் நல்ல வேலை மக்ஸிம் கண்டுபிடித்து விட்டிருந்தார். இல்லையென்றால் கண்களில் பூ விழுந்துவிட்டது என்றுதான் சொல்லியிருப்பார்கள். அந்த விதையின் வேரானது கிட்டத்தட்ட 3 மி.மீ. ஆழத்துக்கு வேரூன்றி இருக்கிறது. ஒருவேளை, அவர் பரிசோதனை செய்யாமல் விட்டிருந்தால், வெள்ளை திசுவே செயலிழந்து பார்வை பறிபோனதுடன் சொல்ல முடியாத துயரங்கள் நேரிட்டிருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். தற்போது செடி வேருடன் பிடுங்கப்பட்டு விட்டது, மக்ஸிம் குணமடைந்து வருகிறார். கண்ணுக்குள் வளர்ந்த தலைவலி விட்டிருக்கிறது. ஒருவேளை மக்ஸிமிடம் அந்த செடியைக் கொடுத்து தனிப்பட்ட முறையில் தன் ரத்தம் என்று வளர்த்து ஆளாக்கிக் கொள்ள சொல்லியிருக்கலாம் மருத்துவர்கள். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை