கரூர் அருகே கணவரை பிரிந்த துக்கத்தில் மகளுடன் பெண் தற்கொலை!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
கரூர் அருகே கணவரை பிரிந்த துக்கத்தில் மகளுடன் பெண் தற்கொலை!

கரூர் அருகே கணவரை பிரிந்த துக்கத்தில் மகளுடன் பெண் தற்கொலை கொண்டது தொடர்பாக.... மகளுடன் கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்ட ரேகா. - படம்: தினமணி கரூர்: கரூர் அருகே கணவrஐ பிரிந்த துக்கத்தில், 11 வயது மகளுடன், பெண் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கரூர் அடுத்த உப்பிடமங்கலம் பேரூராட்சிக்குள்பட்ட கருப்பபூரைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் (42). விவசாயக் கூலி தொழிலாளி. இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, கரூரை அடுத்த வாங்கல் முனியப்பனூரைச் சேர்ந்த சந்தானத்தின் மகள் ரேகா (40) என்பவரை திருமணம் செய்துகொண்டு கருப்பூரில் வசித்து வந்தார். இவர்களுக்கு ரீனுஸ்ரீ என்ற 11 வயது பெண் குழந்தை உள்ளது. இந்தக் குழந்தை கரூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தையை விட்டு மகேஷ் குமார் பிரிந்து வேறு பெண்ணுடன் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ரேகா தனது குழந்தையுடன் முனியப்பனூரில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு, கருப்பூரில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு சென்று குழந்தையுடன் வசித்து வந்தார். மேலும் கணவர் பிரிந்து சென்றதிலிருந்து கடும் மன உளைச்சலில் ரேகா இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் திங்கள் கிழமை அதிகாலை 3 மணி அளவில் தனது தம்பி மோகனுக்கு தொலைபேசியில் அழைத்த ரேகா, தனக்கு பயமாக இருப்பதாகவும், மிகுந்த மன உளைச்சலாக உள்ளதாகவும் கூறியுள்ளார். இதை கேட்ட மோகன் தனது அக்காவுக்கு ஆறுதல் சொல்லி காலையில் வந்து பார்ப்பதாக கூறியுள்ளார். பின்னர் காலை 5 மணி அளவில் மோகனின் செல்போனுக்கு கிணற்றில் - தேடவும் என வாட்ஸ்ஆப் செய்தி வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மோகன் கருப்பூருக்கு விரைந்து வந்துள்ளார். அங்கு வந்து வீட்டில் பார்த்தபோது குழந்தையுடன் ரேகாவை காணவில்லை என அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து, உறவினர்களுடன் அந்தப் பகுதியில் உள்ள கிணறுகளில் மோகன் தேடியுள்ளார். அப்போது, அங்குள்ள தனியார் தோட்டத்து விவசாய கிணற்றில் ரேகாவும் குழந்தையும் சடலமாக மிதந்துள்ளனர். பின்னர், இது குறித்து தகவல் அறிந்த வெள்ளியணை போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து கரூர் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கிணற்றிலிருந்து ரேகா மற்றும் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். [தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை