இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி... பங்குச்சந்தை வர்த்தகம்... - ANI நேற்று பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்த நிலையில் இன்று (அக். 29) உயர்வுடன் நிறைவடைந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 73,268.47 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை முதலே ஏற்றம் கண்டு வந்தது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 905.01 புள்ளிகள் உயர்ந்து 74,151.04 என்ற புள்ளிகளில் நிலைபெற்றது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 237.90 புள்ளிகள் உயர்ந்து 22,936.75 புள்ளிகளில் முடிந்தது. சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய 2 குறியீடுகளும் 1% உயர்ந்தன. நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.98 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.93 சதவீதமும் உயர்ந்தன. துறை சார்ந்த குறியீடுகளில், நிஃப்டி ரியல் எஸ்டேட் பங்குகள் 2.7% என அதிக லாபம் பெற்றன. எப்எம்சிஜி 2.3% லாபம் அடைந்தது. அதேநேரத்தில் ஆட்டோ பங்குகள் 0.24% சரிந்தன. மற்ற அனைத்து துறை பங்குகளும் லாபம் பெற்றுள்ளன. சென்செக்ஸ் 30 பங்குகளில் ஹெச்டிஎப்சி, மாருதி, டெக் மஹிந்திரா, ட்ரெண்ட் ஆகிய 4 பங்குகள் மட்டும் சரிந்தும் மற்ற பங்குகள் அனைத்தும் உயர்ந்தும் முடிந்தன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.26 ஆக முடிந்தது. பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் நேற்று 115 டாலரிலிருந்து இன்று 114 டாலராகக் குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகம் என்று நிலையிலும் நேற்றைவிட இன்று குறைந்துள்ளதால் பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றுகூறப்படுகிறது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை மாற்றாதது, இன்று அதிக பங்குகள் வாங்கப்பட்டதன் காரணமாக பங்குச்சந்தை நேர்மறையுடன் முடிந்ததாக பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகிறார்கள். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கச்சா எண்ணெய் விலை 114 டாலர்! ஆனாலும் உயர்ந்து முடிந்த பங்குச்சந்தை! காரணம்?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Business
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗