கடைசி டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே சொதப்பிய ஆஸ்திரேலிய அணி குறித்து... விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ரபாடா மற்றும் தெ.ஆ. அணியினர் - AFP கடைசி டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சொதப்பி வருகிறது. கேப் டவினில் தொடங்கிய கடைசி டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் தென்னப்பிரிக்கா 329 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா 429 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டெழுந்த தென்னாப்பிரிக்கா 387 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 288 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த நிலையில், கடைசி நாளின் ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே மூன்றாவது பந்தில் மாட் ரென்ஷா ஆட்டமிழந்தார். அடுத்த வந்த லபுஷேன் கடைசி பந்தில் ஆட்டமிழந்து சொதப்பினார். முதல் ஓவரில் 5 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. தற்போது, ஆஸி. 14 ரன்களுடன் விளையாடி வருகிறது. களத்தில் டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன் விளையாடி வருகிறார்கள். தொடர் 1-1 என சமநிலையில் இருப்பதால், இந்தப் போட்டியில் வெல்லும் அணியே தொடரை வெல்லும் என்பதால் சுவாராசியம் கூடியுள்ளது. 2 wickets in first over, KG Rabada on ð¥. pic.twitter.com/Tb2RbuYA48 தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கடைசி நாள்: முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்த ஆஸி.! ரபாடா அசத்தல்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗