தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 429 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய வீரர்கள் - படம் | AP தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 429 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்கா முதலில் விளையாடியது. தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் மார்க்யூஸ் அக்கர்மேன் அதிகபட்சமாக 94 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அய்டன் மார்க்ரம் 78 ரன்கள், மார்கோ யான்சென் 52 ரன்கள், டேவிட் பெடிங்ஹம் 50 ரன்கள், ரியான் ரிக்கல்டான் 42 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நாதன் லயன் இரண்டு விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் கூப்பர் கானலி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். ஆஸ்திரேலியா 100 ரன்கள் முன்னிலை! தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 429 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய ஜோஷ் இங்லிஷ் சதம் விளாசி அசத்தினார். அவர் 135 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அலெக்ஸ் கேரி 80 ரன்கள், மாட் ரென்ஷா 74 ரன்கள், கேமரூன் கிரீன் 65 ரன்கள், டிராவிஸ் ஹெட் 41 ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் சிமோன் ஹார்மர் 4 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ககிசோ ரபாடா, ஜெரால்டு கோட்ஸீ மற்றும் வியான் முல்டர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவைக் காட்டிலும் 100 ரன்கள் முன்னிலை பெற்றது. 100 ரன்கள் பின் தங்கிய நிலையில் மூன்றாம் நாளில் தென்னாப்பிரிக்க அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 31 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலியா 100 ரன்கள் முன்னிலை; தடுமாறும் தென்னாப்பிரிக்கா!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗