கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய தென்னாப்பிரிக்கா!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Sports ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய தென்னாப்பிரிக்கா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 176 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 176 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 429 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 100 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் வியான் முல்டர் மற்றும் ரியான் ரிக்கல்டான் இருவரும் சதம் விளாசி அசத்தினர். வியான் முல்டர் 115 ரன்கள் மற்றும் ரியான் ரிக்கல்டான் 101 ரன்கள் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, மார்க்யூஸ் அக்கர்மேன் 62 ரன்கள், மேத்யூ பிரீட்ஸ்க் 43 ரன்கள், கேப்டன் டெம்பா பவுமா 35 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லயன் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஜோஷ் ஹேசில்வுட் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியாவுக்கு 288 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடரை வென்ற தென்னாப்பிரிக்கா! 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏமாற்றமளித்தனர். அணியில் அதிகபட்சமாக நாதன் லயன் 57 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேமரூன் கிரீன் 27 ரன்கள், டிராவிஸ் ஹெட் 14 ரன்கள் மற்றும் கேப்டன் பாட் கம்மின்ஸ் 11 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சிமோன் ஹார்மர் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ககிசோ ரபாடா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சிமோன் ஹார்மருக்கு ஆட்ட நாயகன் விருதும், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட மார்கோ யான்சனுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை