கடற்படையை விரிவுபடுத்த ரூ.40,000 கோடியில் 8 அதிநவீன போர்க்கப்பல்கள் தயாரிக்க திட்டம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
கடற்படையை விரிவுபடுத்த ரூ.40,000 கோடியில் 8 அதிநவீன போர்க்கப்பல்கள் தயாரிக்க திட்டம்

புதுடெல்லி: கடற்படையை விரிவுப்​படுத்த ரூ.40,000 கோடி​யில் 8 அதிநவீன போர்க்கப்பல்கள் தயாரிக்​கும் திட்​டத்​துக்​காக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்​புதல் அளித்​துள்​ளது. பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான பாது​காப்​புக்​கான அமைச்​சரவைக் குழு (சிசிஎஸ்), இந்​திய கடற்​படைக்​காக 8 அதிநவீன போர்க்​கப்​பல்​களைக் கட்​டுவதற்கு ரூ.40,000 கோடி மதிப்​பிலான பாது​காப்பு திட்​டத்​துக்கு ஒப்​புதல் அளித்​துள்​ளது. இந்​திய கடற்​படையை விரிவுப்​படுத்​தும் நோக்​கில் செயல்​படுத்​தப்​படும் இத்​திட்​டத்தை, கொல்​கத்​தாவைத் தளமாகக் கொண்ட ‘கார்​டன் ரீச் ஷிப் பில்​டர்ஸ் அன்ட் இன்​ஜி​னியர்ஸ்’ (ஜிஆர்​எஸ்இ) மற்​றும் கோவாவில் உள்ள ‘கோவா ஷிப்​யார்ட் லிமிடெட்’ (ஜிஎஸ்எல்) ஆகிய இரண்டு முக்​கிய பொதுத்​துறை கப்​பல் கட்​டும் நிறு​வனங்​கள் மேற்​கொள்​ளும் என தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக இவ்​விரு நிறு​வனங்​களு​டன் அரசு விரைவில் ஒப்பந்தம் மேற்​கொள்​ளும் என தகவல்​கள் தெரி​விக்​கின்​றன. இது குறித்து அதி​காரி​கள் கூறிய​தாவது: புதி​ய​தாக தயாரிக்கப்படும் 8 போர்க்​கப்​பல்​களும் அதிவேக மேற்​பரப்​புப் போர்க்​கப்​பல்​களாக இருக்​கும். இவற்​றின் வேகம் சுமார் 30 நாட்ஸ் ஆக இருக்​கும். முதல் போர்க்​கப்​பல் 2030-க்​குள் ஒப்​படைக்க இலக்கு நிர்​ணயிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் கட்​டு​மான கால அட்​ட​வணையை விரைவுபடுத்த முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​பட்டு வருகின்​றன. 8 கப்​பல்​களும் இந்​தி​யாவிலேயே கட்​டப்​படுவது, உள்​நாட்டு கப்பல் கட்​டும் திறன்​களை ஆதரிப்​ப​தோடு, நாட்​டின் உள்​நாட்டு பாதுகாப்பு உற்​பத்தி சூழலமைப்​பையும் வலுப்​படுத்​தும் என எதிர்பார்க்​கப்​படு​கிறது. இந்த அதிநவீன போர்க்​கப்​பல்​கள் பல்வேறு கடல்​சார் பாது​காப்பு நட​வடிக்​கைகளை மேற்​கொள்ளும்திறன் கொண்ட, தகவ​மைத்​துக் கொள்​ளக்​கூடிய, பல்திறன் கொண்ட தளங்​களாக இருக்​கும். இக்​கப்​பல்​களின் சேர்க்கை, முக்​கியத்​து​வம் வாய்ந்த கடல்​சார் பகுதி​யான இந்தியப் பெருங்​கடல் பிராந்​தி​யம் முழு​வதும் இந்​தி​யக் கடற்படையின் போர் தயார்​நிலை​யையும் செயல்​பாட்டு இருப்பையும் வலுப்​படுத்​தும். இவ்​வாறு அதி​காரி​கள் தெரிவித்தனர்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை