ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் குறித்து... இயக்குநர் ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் விஜய்யின் மகனாக ஜேசன் சஞ்சய் சிக்மா திரைப்படம் மூலம் இயக்குநராகத் திரைத்துறைக்கு அறிமுகமானார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால், நடிகராகும் திட்டத்தில் ஜேசன் இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், இயக்குநர் அட்லி தயாரிப்பில் கதாநாயகனாக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இப்படத்தை டியூட் திரைப்படத்தை இயக்கி கவனம் பெற்ற கீர்த்திஸ்வரன் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். தற்போது, கீர்த்திஸ்வரன் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குவதற்கான பணிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கதாநாயகனாக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்? தயாரிப்பாளர் இவரா?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗