'கட்டுப்படியாகும்' கட்டணம்!

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
'கட்டுப்படியாகும்' கட்டணம்!

ஆட்டோ ஓட்டுநர்களின் 13 ஆண்டு கால கோரிக்கைக்குத் தீர்வு கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பதன்மூலம் ஆட்டோ ஓட்டுநர்களின் 13 ஆண்டு கால கோரிக்கைக்குத் தீர்வு கிடைத்திருக்கிறது. புதிய கட்டண மாற்றத்தின்படி, முதல் 1.8 கி.மீ. தொலைவுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.50-ஆகவும், கூடுதலாக பயணிக்கும் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.25-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மலைப் பாதைகளில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணத்தைவிட 1.2 மடங்கு கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதன்படி, மலைப் பாதைக்கான அடிப்படைக் கட்டணம் ரூ.60-ஆகவும், கூடுதலாகப் பயணிக்கும் ஒவ்வொரு கி.மீ.-க்கும் ரூ.30-ஆகவும் இருக்கும். இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வழக்கமான கட்டணத்தைவிட ஒன்றரை மடங்கு கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்களில் காத்திருப்புக் கட்டணமாக ஒரு நிமிஷத்துக்கு ரூ.1 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 லட்சம் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் மட்டும் 2 லட்சம் ஆட்டோக்கள். ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணம் கடைசி யாக கடந்த 2013-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, முதல் 1.8 கி.மீ. தொலைவுக்கு ரூ.25, அதற்குப் பிறகு ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.12 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எரிபொருள் விலை, வாகனப் பராமரிப்புச் செலவு, காப்பீட்டுக் கட்டணம் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ளதால், ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என ஓட்டுநர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது, முதல் 1.5 கி.மீ. தொலைவுக்கு ரூ.60 முதல் ரூ.70 வரை குறைந்தபட்சக் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்றும், கூடுதல் கி.மீ.க்கு ரூ.25 முதல் ரூ.30 வரை வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. நுகர்வோர் அமைப்புகள் குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தின. இரு தரப்பு கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து புதிய கட்டண மாற்றத்தை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு அறிவித்திருக்கிறது. இந்தக் கட்டண உயர்வை ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் வரவேற்றுள்ளன. பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க மாட்டோம் எனவும் உறுதியளித்திருக்கின்றன. இந்தப் புதிய கட்டண உயர்வு பொதுமக்களுக்கும் அதிக சுமையை ஏற்படுத்தாமல், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் நியாயமான வருவாயாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஆட்டோ என்றாலே அதிக கட்டணம் கேட்பார்கள் என்கிற கருத்து பொதுமக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. அதற்குக் காரணம் மீட்டர் போட்டு ஆட்டோக்களை இயக்காததுதான். பழைய கட்டண முறைப்படி மீட்டர் போட்டு இயக்கினால் "கட்டுப்படியாகாது' என்கிற ஆட்டோ ஓட்டுநர்களின் கவலையையும் புறந்தள்ளிவிட முடியாது. இப்போது கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்ப ஆட்டோ மீட்டர்களை 6 மாதங்களுக்குள் மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதுவரையில் புதிய கட்டண அட்டையை பயணிகள் பார்வையில் படும்படி வாகனத்தில் வைத்திருக்க வேண்டும் என்றும் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியிருக்கிறது. ஆட்டோக்களில் மீட்டர் இயக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுவதை போக்குவரத்துத் துறையும் தொடர்ச்சியாகக் கண்காணித்து, அரசின் உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டோக்களில் ஜிபிஎஸ் வசதியுள்ள இலவச டிஜிட்டல் மீட்டர்களை வழங்க வேண்டும்; ரேபிடோ, ஓலா, ஊபர் உள்ளிட்ட செயலிகளிலும் இந்தக் கட்டண நடைமுறையை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; தனியார் நிறுவனங்களைப் போன்று அரசும் செயலியை அறிமுகப்படுத்த வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றன. இப்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைவிட ஆட்டோ பயணத்தை ஒருங்கிணைக்கும் செயலிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் மிகக் குறைவு என்பதால் அவர்களின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. கேரளத்தில் ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணமாக முதல் 1.5 கி.மீ.க்கு ரூ.30 நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 1.5 கி.மீ.க்கு மேல் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.15 அல்லது ஒவ்வொரு 100 மீட்டருக்கும் ரூ.1.50 கூடுதல் கட்டணம். கர்நாடகத்தில் குறைந்தபட்ச கட்டணமாக முதல் 2 கி.மீ.க்கு ரூ.36, 2 கி.மீ.க்கு மேல் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.18 கூடுதல் கட்டணம். ஆந்திரத்தில் குறைந்தபட்ச கட்டணமாக முதல் 1.6 கி.மீ.க்கு ரூ.20, அதற்கு மேல் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.11 நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அண்டை மாநிலங்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்துடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் இப்போது ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நியாயமான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ரேபிடோ, ஓலா, ஊபர் போன்ற செயலிகள் மூலம் இயக்கப்படும் பைக்-டாக்ஸி சேவையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் ஆதங்கப்படுகின்றனர். அவற்றைத் தடை செய்ய வேண்டும் அல்லது முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். தமிழகத்தில் பைக்-டாக்ஸி சேவைக்கு சட்டப்படி அனுமதி அளிக்கப்படவில்லை என்ற சூழலில், அதுகுறித்து விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தியிருக்கிறது. அனைத்து மகளிருக்கும் இலவசப் பயணம் என்கிற அறிவிப்பால், ஆட்டோ ஓட்டுநர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அறிவிக்கப்பட்டிருக்கும் ஆட்டோ கட்டண உயர்வு அவர்களுக்கு ஓரளவு ஆதரவாக அமையும். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை