கயல்விழி அழகிரிக்கு எதிரான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
கயல்விழி அழகிரிக்கு எதிரான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

கயல்விழி அழகிரிக்கு எதிரான வழக்கில் 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றி... சென்னை உயர்நீதிமன்றம். - கோப்புப் படம் கயல்விழி அழகிரிக்கு எதிரான வழக்கில் 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகா் 3-ஆவது பிரதான சாலையில் திமுக முன்னாள் மத்திய அமைச்சா் மு.க.அழகிரியின் மகள் கயல்விழிக்குச் சொந்தமான கட்டடத்தில், தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் என்ஆா்ஐ கிளை இயங்கி வருகிறது. இந்த கட்டடத்தில் உள்ள மின்தூக்கி (லி‘ஃ‘ப்ட்) பழுதடைந்தது குறித்து, கயல்விழியிடம் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கடந்த ஜூலை 20-ஆம் தேதி வங்கிக்கு நேரில் சென்ற கயல்விழி, வங்கி கிளை மேலாளா் ஹா்ஷின் சிங்கிடம் பேசியதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், கயல்விழி வங்கி மேலாளரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வங்கி கிளையின் தலைமை மேலாளா் நமச்சிவாயம் அளித்த புகாரின் பேரில், கயல்விழி மீது 4 பிரிவுகளின் கீழ் சாஸ்திரி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜரான கயல்விழியை கைது செய்த போலீஸாா், பின்னா், சொந்த பிணையில் அவரை விடுவித்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கயல்விழி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அவரது மனுவில், வங்கி மேலாளா் தன்னை தகாத வாா்த்தைகளால் திட்டினாா், அதை மறைத்து தனக்கு எதிராக புகாா் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தாா். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுவை வாபஸ் பெறுவதாக கயல்விழி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் இறுதி அறிக்கையை 4 வாரங்களில் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சாஸ்திரி நகர் போலீஸாருக்கு உத்தரவிட்டு மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை