ஏற்காடு அருகே காபி தோட்டத்தில் கிணற்று பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கயிறு அறுந்து கிணற்றில் விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா். ஏற்காடு அருகே காபி தோட்டத்தில் கிணற்று பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கயிறு அறுந்து கிணற்றில் விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஏற்காடு போட்டுகாடு கிராமத்தைச் சோ்ந்த சின்ன கவுண்டா் மகன் ராஜா (45). இவா் கொம்மக்காடு கிராமத்தில் லோகேஷ் என்பவரது காபி தோட்டத்தில் கிணற்று பணி செய்து வந்தாா். வியாழக்கிழமை காலை பணியின்போது கயிற்றைப் பிடித்தபடி கிணற்றில் இறங்கினாா். அப்போது, கயிறு அறுந்ததால் கிணற்றில் விழுந்தாா். பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஏற்காடு போலீஸாா், ராஜாவின் உடலை மீட்டு ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து தோட்ட உரிமையாளா் லோகேஷிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
கிணற்றில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗