கோடிக்கணக்கில் கட்டணம் செலுத்தி மருத்துவம் படிக்கும் EWS உயர் ஜாதி ஏழைகள்.. அதிர்ச்சி தகவல்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
கோடிக்கணக்கில் கட்டணம் செலுத்தி மருத்துவம் படிக்கும் EWS உயர் ஜாதி ஏழைகள்.. அதிர்ச்சி தகவல்!

டெல்லி: நீட் முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில், பொதுப்பிரிவு நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 100 EWS மாணவர்கள் கோடிக்கணக்கில் கட்டணம் வாங்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளது அம்பலமாகியுள்ளது. நீட் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் எடுத்த சுமார் 100 EWS பிரிவு மாணவர்கள் ரூ. 2 கோடி வரை செலுத்தி தனியார் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ சீட் பெற்றுள்ளனர். மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பி.ஜி. கலந்தாய்வு முடிவுகள் தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. மத்திய பாஜக அரசு, முன்னேறிய பிரிவினருக்கான பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இது இட ஒதுக்கீட்டின் நோக்கத்தை அப்பட்டமாக மீறுவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இட ஒதுக்கீட்டை சமூக அநீதியைச் சரிசெய்யும் ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, வறுமை ஒழிப்புத் திட்டமாகப் பயன்படுத்தப்படுவதாக விமர்சிக்கப்பட்டது. ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் ஈட்டும் உயர்சாதியினர் EWS பிரிவின் கீழ் வருவார்கள். மேலும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் விவசாய நிலமோ அல்லது நகர்ப்புறங்களில் பெரிய அளவிலான குடியிருப்பு இடங்களோ வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைகளும் உள்ளன. இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் தனியார் கல்லூரிகளில் கோடிக் கணக்கில் பணம் செலுத்தி படிக்கும் வகையில் EWS மாணவர்கள் மருத்துவ சீட் பெற்றுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டு வருமானம் 8 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்களால் இந்த அளவுக்கு கோடிக்கணக்கில் கட்டணம் செலுத்தி எப்படி படிக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. EWS இட ஒதுக்கீட்டில் சுமார் 100 மாணவர்கள், ரூபாய் 2 கோடி ஆண்டுக் கட்டணம் செலுத்தி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்க மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் தேர்வு செய்துள்ளது தெரியவந்துள்ளது. நீட் தேர்வில் 79,396-வது ரேங்க் பெற்ற மாணவர் ஒருவர் நவி மும்பையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் ரூ.2 கோடியும், 71,263-வது ரேங்க் பெற்ற மற்றொரு மாணவர் பெங்களூரில் உள்ள மருத்துவக் கல்ளூரியில் ரூ.1.8 கோடியும் செலுத்தி PG மருத்துவப் படிப்பு மேற்கொள்ள உள்ளனர். மாணவர்கள் தங்களின் கலந்தாய்வு விருப்பங்களில் இந்தக் கல்லூரிகளையும் படிப்புகளையும் பட்டியலிட்டிருந்தனர். அவர்களின் விருப்பத்தேர்வுகள் மற்றும் தரவரிசையின் அடிப்படையில் அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் தற்போதைய இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளலாம், அடுத்த நிலைக்கு உயர்த்தக் கோரலாம் அல்லது படிப்பை விட்டு வெளியேறலாம். அவர்கள் தேர்வு செய்துள்ள படிப்புகளுக்கு கட்டணம், ரூ.1.8 கோடி முதல் 2.1 கோடி வரை உள்ளன. பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவைச் (EWS) சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தனியார் கல்லூரிகளில் சுயநிதி ஒதுக்கீட்டின் கீழ் பொதுப் பிரிவில் கோடிக்கணக்கில் கட்டணம் செலுத்தும் முதுகலை மருத்துவ இடங்களை தேர்வு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோடிக்கணக்கில் கல்விக் கட்டணம் செலுத்தக் கூடிய பொருளாதாரப் பின்னணி கொண்டவர்கள் எப்படி EWS இட ஒதுக்கீட்டிற்குள் வருவார்கள் என்பது தற்போது மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது. வருமான வரம்புக்குள் வராத நபர்கள் போலியான ஆவணங்கள் மூலம் சான்றிதழ்களைப் பெறுகின்றனரா என தீவிர விவாதங்கள் எழுந்துள்ளன.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை