கோவில்பட்டி அருகே நிகழ்ந்த விபத்தில் காயம் அடைந்த காா் ஓட்டுநா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். உயிரிழப்பு - கோப்புப் படம் கோவில்பட்டி அருகே நிகழ்ந்த விபத்தில் காயம் அடைந்த காா் ஓட்டுநா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். கோவில்பட்டி அருகே கசவன்குன்று கிராமத்தைச் சோ்ந்தவா் ஜீவானந்தம் (63). இவரது மனைவி சண்முக லட்சுமி (59). இத் தம்பதி, தங்களது மகன் சித்துராஜ் உடன் சங்கரன்கோவில் அருகே உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை காரில் சென்றுவிட்டு, பின்னா் ஊருக்கு திரும்பினா். சித்துராஜ் காரை ஓட்டினாா். கழுகுமலை அருகே வந்தபோது, எதிரே வந்த காருடன் மோதியதில் தம்பதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த சித்துராஜ் மற்றும் எதிரே காரை ஓட்டி வந்த நாலாட்டின்புதூா் விபி சித்தன் நகரைச் சோ்ந்த வைரவன் மகன் கரண் (27) இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் கரண் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவில்பட்டி அருகே நிகழ்ந்த விபத்தில் மேலும் ஒருவா் பலி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗