கொல்கத்தா விமான நிலையத்தில் ஆகாசா ஏர் விமானத்தின் வால் பகுதி தரையில் மோதியது பற்றி... ஆகாசா ஏர் விமானம் - கோப்புப்படம். கொல்கத்தா விமான நிலையத்தில் ஆகாசா ஏர் விமானத்தின் வால் பகுதி தரையில் மோதியதால் பரபரப்பு நிலவியது. அகமதாபாத்திலிருந்து கொல்கத்தா நோக்கி வந்த ஆகாசா ஏர் விமானம், சனிக்கிழமை காலை கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது அதன் வால் பகுதி தரையில் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் தற்போது விரிவான ஆய்வுக்காக கொல்கத்தா விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அகமதாபாத்தில் இருந்து கொல்கத்தா வந்த விமானம், தரையிறங்கும்போது 'கோ-அரவுண்ட்' முறையில் மீண்டும் மேலே பறந்து, பின்னர் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாக ஆகாசா ஏர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அனைத்து பயணிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாகயும் குறிப்பிடப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கிய பின் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதன் வால் பகுதி தரையில் மோதியிருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து கண்காணிப்பு இணையதள தகவல்களின்படி, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானமாகும். இது காலை 7. 40 மணியளவில் கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதேநேரத்தில் விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கொல்கத்தா: ஆகாசா ஏர் விமானத்தின் வால் பகுதி தரையில் மோதியதால் பரபரப்பு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗