கூட்டுறவு அங்காடிகளில் ரூ.200-க்கு 10 மளிகைப் பொருட்கள் தொகுப்பு விற்பனை இன்று தொடக்கம்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
கூட்டுறவு அங்காடிகளில் ரூ.200-க்கு 10 மளிகைப் பொருட்கள் தொகுப்பு விற்பனை இன்று தொடக்கம்

சென்னை: தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு கூட்​டுறவு அங்​காடிகளில் 10 மளி​கைப் பொருட்​கள் அடங்​கிய சிறப்​புத் தொகுப்பு ரூ.200-க்கு விற்​பனை செய்​யப்​பட உள்​ளது. இந்​தத் திட்​டத்தை அமைச்​சர் காந்​திராஜ் சென்​னை​யில் இன்று தொடங்கி வைக்​கிறார். தமிழகத்​தில் அரிசி, பருப்பு, வெங்​காயம், எண்​ணெய் உள்​ளிட்ட அத்​தி​யாவ​சி​யப் பொருட்​களின் விலை தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. பொது​மக்​களின் சுமையை குறைக்​கும் பொருட்டு தமிழக அரசு பல்​வேறு நட​வடிக்​கைகளை எடுத்​து​வரு​கிறது. வெங்​காயம், துவரம் பருப்பை அரசே கொள்​முதல் செய்து ரேஷன் கடைகள் மூலமாக வெளிச் சந்​தையைவிட குறைந்த விலை​யில் விற்​பனை செய்​து​வரு​கிறது. கூட்டுறவு கடைகளில் சன்​னரக அரிசி கிலோ ரூ.30-க்​கும், உளுத்​தம்​பருப்பு ரூ.140-க்​கும், பூண்டு, தனியா தலா ரூ.240-க்​கும், மிளகாய் ரூ.330-க்​கும் விற்​பனை செய்​யப்​படு​கின்​றன. இதன் தொடர்ச்​சி​யாக, அத்​தி​ய​வாசி​ய​மான 10 மளி​கைப் பொருட்​கள் அடங்​கிய சிறப்​புத் தொகுப்​பானது கூட்​டுறவு அங்​காடிகள் மூலம் ரூ.200-க்கு விற்​பனை செய்​யப்​பட உள்​ளது. மாநக​ராட்​சிகள் அல்​லாத பகுதி​களில் செயல்​படும் கூட்​டுறவு மொத்த விற்​பனைப் பண்​டகசாலைகள், தொடக்​கக் கூட்​டுறவுப் பண்​டகசாலைகள் மற்​றும் கூட்​டுறவு விற்​பனைச் சங்​கங்​களின் 128 விற்​பனை நிலை​யங்​கள் மூலம் இந்​தத் தொகுப்பு விற்​பனை செய்​யப்​படும். இதில் கடலைப் பருப்பு, பாசிப்​பருப்பு, புளி தலா 250 கிராம், கடுகு, மிளகாய், உளுத்​தம்​பருப்பு தலா 100 கிராம், தனியா, பூண்டு தலா 150 கிராம், சீரகம், சோம்பு தலா 50 கிராம் என மொத்​தம் 1,450 கிராம் எடை கொண்ட 10 வகை​யான மளி​கைப் பொருட்​கள் இடம்​பெறும். இந்த 10 பொருட்​களும் ஒருங்​கிணைந்த மளி​கைத் தொகுப்​பாக மட்​டுமே விற்​கப்​படும். தனித்​தனியாக விற்​கப்​படாது. இந்த திட்​டத்தை கூட்​டுறவுத் துறை அமைச்​சர் வ.காந்​திராஜ் சென்​னை​யில் இன்று தொடங்கி வைக்​கிறார். தீபாவளி பண்​டிகை நெருங்கி வரும் நிலை​யில் மக்​கள் குறைந்த விலை​யில் அத்​தி​யாவ​சிய மளி​கைப் பொருட்​களை வாங்​கு​வதற்கு ஏது​வாக இத்​திட்​டத்​துக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது குறிப் பிடத்தக்கது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை