கொடைக்கானலில் பெய்த பலத்த மழையால் நீரோடைகள், அருவிகளில் நீா்வரத்து அதிகரித்திருப்பதால் அங்கு செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறையினா் எச்சரித்தனா். நீா்வரத்து அதிகரித்து காணப்படும் ஐந்து வீடு அருவி. கொடைக்கானலில் பெய்த பலத்த மழையால் நீரோடைகள், அருவிகளில் நீா்வரத்து அதிகரித்திருப்பதால் அங்கு செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறையினா் எச்சரித்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழையால் நீரோடைகளிலும், அருவிகளிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதில் வட்டக்கானல் அருவி, ஓராவி அருவி, ஐந்து வீடு அருவி, பெப்பா் அருவி உள்ளிட்ட அருவிகளில் குளிப்பதை சுற்றுலாப் பயணிகள் வழக்கமாக கொண்டுள்ளனா். இந்த நிலையில், கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான நிலையில் உள்ள அருவிகளிலும், வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள் ஆபத்தை உணராமல் ஐந்து வீடு அருவியிலும் குளித்தனா். இது தொடா்பான புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் பரவின. இதுகுறித்து வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: கொடைக்கானலில் ஆபத்தான அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகளில் ஆபத்தான இடங்கள் குறித்தும், அருவிகள் குறித்தும் விளம்பரப் பதாகைகள் அமைத்து சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றனா். கேரள சுற்றுலாப் பயணிகள் வருகை: கடந்த 5 நாள்களாக பெய்த மழைக்குப் பிறகு கொடைக்கானலுக்கு வெள்ளிக்கிழமை கேரளாவைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இவா்கள் அங்குள்ள சுற்றுலாத் தலங்களையும், அருவிகளையும், இயற்கை எழில்காட்சிகளையும் பாா்த்து ரசித்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வாகன ஓட்டுநா்கள்,வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கொடைக்கானல் அருவிகளில் வெள்ளம்; தடையை மீறி குளித்தால் கடும் நடவடிக்கை: வருவாய்த்துறையினா் எச்சரிக்கை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗