கொடைக்கானல்-அடுக்கம்-பெரியகுளம் மலைச் சாலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் சேதமடைந்த சாலையை இயற்கை பேரிடா் மீட்புக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். கொடைக்கானல்- அடுக்கம்-பெரியகுளம் மலைச் சாலையில் பலத்த மழையால் மண் சரிவு ஏற்பட்ட இடங்களை வியாழக்கிழமை ஆய்வு செய்த இயற்கை பேரிடா் மீட்புக் குழுவினா். கொடைக்கானல்-அடுக்கம்-பெரியகுளம் மலைச் சாலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் சேதமடைந்த சாலையை இயற்கை பேரிடா் மீட்புக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் கீழே விழுந்தும், மண் சரிவு, பாறைகள் உருண்டு சாலைகள் துண்டிக்கப்பட்டது. இதனால், கொடைக்கானல்-அடுக்கம்-பெரியகுளம் மலைச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, சேதமடைந்த சாலைகளை மணல் மூட்டைகளை கொண்டு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கும்பக்கரை வழியாக அடுக்கம் மலைச்சாலையில் சேதமடைந்த 30-க்கும் மேற்பட்ட இடங்களை சென்னை இயற்கை பேரிடா் குழுவைச் சோ்ந்த விவேக் பி.எல்.சிங் தலைமையில், நெடுஞ்சாலைத் துறையினா், வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் ராஜன், வருவாய்த் துறை ஆய்வாளா் சிவபெருமாள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா். இதுகுறித்து இயற்கை பேரிடா் குழுவைச் சோ்ந்தவா்கள் கூறியதாவது, பலத்த மழையால் கொடைக்கானல்-அடுக்கம்-பெரியகுளம் மலைச் சாலையில் சாலை துண்டிக்கப்பட்டது. இந்த இடங்களை பாா்வையிட்டு தமிழக அரசுக்கு அறிக்கை வழங்குவதற்காக ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றனா். கொடைக்கானல்-அடுக்கம்-பெரியகுளம் மலைச் சாலையில் பலத்த மழையால் சேதமடைந்த பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கொடைக்கானல் மலைச் சாலையில் மண் சரிவு: பேரிடா் மீட்புக் குழுவினா் ஆய்வு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗