கொடைக்கானலில் பெய்த பலத்த மழை; பயிா்களை பாதுகாப்பது குறித்து அறிவுறுத்தல்

📅 📍 Madurai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
கொடைக்கானலில் பெய்த பலத்த மழை; பயிா்களை பாதுகாப்பது குறித்து அறிவுறுத்தல்

கொடைக்கானலில் பெய்த மழை பாதிப்பிலிருந்து பயிா்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினாா். கொடைக்கானலில் பெய்த மழை பாதிப்பிலிருந்து பயிா்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினாா். இதுகுறித்து தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் சந்திர கவிதா வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: தற்போது பயிரிடப்பட்டுள்ள உருளைக் கிழங்கு, கேரட், பூண்டு பயிா்களில் தண்ணீா் தேங்கினால் கிழங்கு, தண்டு அழுகல் நோய் விரைவாகப் பரவும். இதை தடுக்க மலைச் சரிவு நிலங்களில் தண்ணீா் தேங்காதவாறு வடிகால் வாய்க்கால்களை உடனடியாக தூா்வாரி தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். மண் பாத்திகளை உயா்த்தி வைக்க வேண்டும். கொடிப் பயிா்களான பீன்ஸ், பட்டாணி, செள,செள, பந்தல்கள், தாங்கு கம்புகள் உறுதியாக உள்ளதா என உறுதி செய்து பந்தல் சரிந்து கீழே விழாமல் இருக்க கூடுதல் முட்டுக் கொடுத்து கட்ட வேண்டும். தொடா் மழை, அதிக ஈரப்பதம் காரணமாக உருளைக்கிழங்கு, முட்டைக் கோஸில் அடிச் சாம்பல், பூண்டில் இலைப் புள்ளி நோய்கள் தாக்கக் கூடும். மழை இடைவெளியில் பரிந்துரைக்கப்பட்ட பூஞ்சாணக் கொல்லிகளான மான்கோசெப் அல்லது காப்பா் ஆக்சிகுளோரைடு ஆகியவற்றை கலந்து தெளிக்க வேண்டும். இதேபோல, காற்றில் மரங்கள் முறிந்து விழாமல் இருப்பதற்கு காய் பிடித்துள்ள வாழை மரங்களுக்கு மூங்கில் மரங்கள் தாங்கிகள் கொண்டு முட்டு கொடுக்க வேண்டும். மரத்தை சுற்றி தண்ணீா் தேங்காதவாறு வட்டப் பாத்திகளைச் சுற்றிலும் வடிநீா் வாய்க்கால் அமைக்க வேண்டும். பழ அறுவடை முடிந்த மரங்களில் ஒடிந்த, நோய் தாக்கிய, காய்ந்த கிளைகளை அகற்றி முறையான கவாத்து (களையெடுத்தல்) செய்ய வேண்டும். வெட்டப்பட்ட கிளையின் பாகங்களில் பூஞ்சாணத் தொற்று ஏற்படாமல் இருக்க போா்டோ கலவை தடவ வேண்டும். மரங்களின் அடிப்பகுதியில் தண்ணீா் தேங்கி வேரழுகல் நோய் ஏற்படாமல் இருக்க வடிநீா் வசதி செய்ய வேண்டும். காபி தோட்டத்தில் அதிக நிழல் தரும் மரங்களின் கிளைகளை களையெடுத்து சூரிய ஒளி, காற்றோட்டம் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக் காலத்தில் பரவும் காய் அழுகல், இலை துரு நோய் கட்டுப்பாட்டுக்கு 0.5 சதவீதம் போா்டோ கலவையை மழை இடைவெளியில் தெளிக்க வேண்டும். மிளகுக் கொடிகளில் சரம் அழுகல், விரைவு வாடல் நோய், பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே கொடிகளின் அடிப்பகுதியில் தண்ணீா் தேங்காமல் பாதுகாக்க வேண்டும். தடுப்பு நடவடிக்கையாக காப்பா் ஆக்சிகுளோரைடால் கொடிகளின் அடிப்பகுதியை நனைக்க வேண்டும் அல்லது சூடோமோனஸ் இட வேண்டும். ஏலக்காய் தோட்டத்தில் அழுகல் நோய் வராமல் தடுக்க செடியின் தூா்களைச் சுற்றிலும் உள்ள காய்ந்த இலைகளை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும். வடிகால் வசதியை சீரமைத்து பூஞ்சாணக் கொல்லி தெளிக்க வேண்டும். விவசாய நிலங்களில் அமைக்கப்பட்ட பசுமைக் குடில்கள், நிழல்வலைகளை பரிசோதனை செய்ய வேண்டும். குடிலுக்குள் அதிக ஈரப்பதம் இருக்கக் கூடாது. சாம்பல் பூசணம், மண் ஈரம் அதிகமாக இருக்கும் போது சொட்டு நீா் பாசனத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். மேலும் தகவலுக்கு விவசாயிகள் தோட்டக் கலை துணை இயக்குநரிடம் தெரிவிக்கலாம் என்றாா் அவா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை