ஏக்தா நகரில் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா மையம் பற்றி.. பிரதமர் மோடி - X குஜராத்தில் ரூ. 308 கோடியில் சுற்றுலா, உள்கட்டமைப்புத் திட்டங்கள்.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்! குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள ஏக்தா நகரில், சுற்றுலா மற்றும் பொது உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ரூ. 307.83 கோடி மதிப்பிலான 23 வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாகக் குஜராத் வந்துள்ள பிரதமர் மோடி, நேற்று பல்வேறு வளர்ச்சி பணிகளைத் தொடங்கிவைத்த நிலையில், இன்று மேலும் சில திட்டங்களைத் தொடங்கிவைத்தார். ரூ.188.88 கோடி மதிப்பிலான எட்டு புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதன் மூலம், மொத்தம் 31 திட்டங்களுக்கான முதலீட்டு மதிப்பு ரூ. 426.71 கோடியாக உயர்ந்துள்ளது. முன்னதாக, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒற்றுமைச் சிலை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்குப் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். உலகிலேயே மிக உயரமான இந்தச் சிலை அமைந்துள்ள பகுதி, தற்போது முக்கிய சுற்றுலா மையமாக உருவெடுத்துள்ளது. இங்குச் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளையும், பொது உள்கட்டமைப்பையும் மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. முக்கிய சுற்றுலா அம்சங்களில் ரூ. 50 கோடி செலவில் கட்டப்பட்ட இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் உணவகம், ரூ. 16 கோடி மதிப்பிலான 'ஏக்தா குரூஸ்', ரூ. 14.30 கோடி மதிப்பிலான ரெயின் ஃபாரஸ்ட் அம்சம் மற்றும் ரூ. 3.67 கோடி மதிப்பிலான ஈகோ-டிரெயில் ஆகியவை அடங்கும். உள்கட்டமைப்புத் துறையைப் பொறுத்தவரை, ரூ. 45.53 கோடி செலவில் அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், ரூ. 21.40 கோடி மதிப்பிலான நீர் சுத்திகரிப்பு நிலையம், மற்றும் ரூ. 23.81 கோடி செலவில் உருவாக்கப்பட்ட அணிவகுப்பு பாதை உள்ளிட்ட பணிகளை பிரதமர் தொடங்கி வைத்தார். போக்குவரத்து வசதியையும் பயணிகளின் வசதியையும் மேம்படுத்தும் வகையில், ரூ. 28.22 கோடி மதிப்பிலான நகரும் நடைபாதைகள், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ. 23 கோடி செலவில் 24 மீட்டர் அகலமுள்ள குடியிருப்புச் சாலை, ரூ. 14.25 கோடி மதிப்பிலான பணியாளர் குடியிருப்புகள் மற்றும் ஒன்பது மீட்டர் நீளம் கொண்ட இரண்டு குளிரூட்டப்பட்ட மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் அனைத்தும், ஏக்தா நகர் மற்றும் 'ஸ்டேச்சு ஆஃப் யூனிட்டி' பகுதியை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்றும் குஜராத் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாகும். இதில் புதிய சுற்றுலா ஈர்ப்புகளை உருவாக்குதல், போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் பொது வசதிகளைச் சீரமைத்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
குஜராத்தில் ரூ. 308 கோடியில் 23 புதிய திட்டங்கள்! பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗