குளறுபடிகளைச் சரிசெய்து ரூ. 2,500 வழங்கப்படும்: அமைச்சர் ஜெகதீஸ்வரி

📅 📍 Madurai, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
குளறுபடிகளைச் சரிசெய்து ரூ. 2,500 வழங்கப்படும்: அமைச்சர் ஜெகதீஸ்வரி

ரூ. 2,500 மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக அமைச்சர் ஜெகதீஸ்வரி அளித்த விளக்கம் பற்றி... அமைச்சர் ஜெகதீஸ்வரி ரூ. 2,500 மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கமளித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழாவையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி, சட்டப்பேரவை உறுப்பினர் கல்லணை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சி நிர்வாகிகள் தனித்தனியாக வந்து மரியாதை செலுத்துவது குறித்து விளக்கமளித்தார். பொதுவாக ஒரு கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் அனைவரும் ஒன்றாக வந்து மரியாதை செலுத்துவது வழக்கம் என்றாலும், இந்த முறை காலையில் இருந்து வெவ்வேறு குழுக்களாக வந்து மரியாதை செலுத்துவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், கட்சி நிர்வாகிகளுக்கு வெவ்வேறு பணிகள் இருப்பதால் தனித்தனியாக வந்து மரியாதை செலுத்துவதாகவும், இதனை கட்சிக்குள் அணிகளாகப் பிரிந்திருப்பதாகக் கருதக் கூடாது என்றும் தெரிவித்தார். தங்களுக்குள் எந்தவிதமான வேற்றுமையும் இல்லை என்றும், ஒற்றுமையாகச் செயல்படுவதே தங்களது நோக்கம் என்றும் கூறினார். தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட 2,500 ரூபாய் எப்போது வழங்கப்படும் எனக் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். இத்திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் அவற்றைச் சரிசெய்து, கடைக்கோடி மக்களுக்கும் அதன் பயன் சென்றடையும் வகையில் முதல்வரின் உத்தரவின்பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும் முதல்வர் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தெரிவித்தார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை