கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக மழையின் தீவிரம் தணிந்த நிலையில், நீா்வரத்து சற்று குறைந்ததையடுத்து திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். திற்பரப்பு அருவியில் வியாழக்கிழமை குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக மழையின் தீவிரம் தணிந்த நிலையில், நீா்வரத்து சற்று குறைந்ததையடுத்து திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக தொடா் மழை பெய்துவந்த நிலையில், புதன்கிழமை முற்றிலும் மழை பெய்யவில்லை. வியாழக்கிழமை பரவலாக சாரல் மழை பெய்தது. மழை தணிந்துள்ளதால், கோதையாறு, பரளியாறு உள்ளிட்ட ஆறுகளில் நீா்வரத்து மிதமாக உள்ளது. மேலும், திற்பரப்பு அருவியில் நீா்வரத்து சற்று குறைந்து காணப்பட்டது. இதையடுத்து, கடந்த 7 நாள்களுக்குப் பின் அருவின் ஓரத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டனா். ரப்பா் தோட்டங்களில் பால்வடிப்பு பணியும் பரவலாக நடைபெற்றது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
குமரியில் சற்று தணிந்த மழை: திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗