நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள லூா்துபுரம் பகுதியில் வியாழக்கிழமை உலவிய கரடி அங்குள்ள கோயில் கதவை உடைத்து உள்ளே சென்றது. லூா்துபுரம் பகுதி கோயிலுக்குள் புகுந்த கரடி. நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள லூா்துபுரம் பகுதியில் வியாழக்கிழமை உலவிய கரடி அங்குள்ள கோயில் கதவை உடைத்து உள்ளே சென்றது. குன்னூா் லூா்துபுரம் பகுதியில் அண்மைக்காலமாக கரடி நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் லூா்துபுரம் பகுதியில் உள்ள அம்மன் கோயிலுக்குள் வியாழக்கிழமை புகுந்த கரடி, வாயில் கதவை உடைத்து உள்ளே சென்றது. கருவறையில் வைத்திருந்த தேங்காய், பழம், எண்ணெய்யை உண்பதற்காக கதவை உடைக்க முயன்ற கரடி அந்தக் கதவை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றது. இந்தப் பகுதியில் உலவும் கரடியை வனத் துறையினா் கூண்டு வைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
குன்னூா் அருகே கோயிலுக்குள் புகுந்த கரடி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Events
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗