மண் சரிவு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குன்னூா்-உதகை மலை ரயில் சேவை வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது. குன்னூரில் இருந்து உதகைக்கு வெள்ளிக்கிழமை காலை புறப்பட்ட மலை ரயில். மண் சரிவு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குன்னூா்-உதகை மலை ரயில் சேவை வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்படும் மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். இந்நிலையில், வடகிழக்குப் பருவமழையையொட்டி, உதகையில் கடந்த சில நாள்களுக்கு முன் கனமழை பெய்தது. இதனால், ரயில் தண்டவாளத்தில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு, தண்டவாளத்தில் பாறை, கற்கள் விழுந்தன. இதையடுத்து, மலை ரயில் சேவை கடந்த 26-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டு, தண்டவாளத்தை சீரமைக்கும் பணியும், மண் சரிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வந்தன. இந்நிலையில், பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை பாதுகாப்புப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடா்ந்து, மலை ரயில் சேவை வெள்ளிக்கிழமை காலை தொடங்கப்பட்டது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
குன்னூா் - உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗