ரசிகர்களைச் சந்தித்த அமிதாப் பச்சன்... நடிகர் அமிதாப் பச்சன் நடிகர் அமிதாப் பச்சன் ரசிகர்களைச் சந்திக்க குண்டு துளைக்காத கண்ணாடி பாதுகாப்புடன் வந்துள்ளார். பாலிவுட்டில் தனது நடிப்புக்காக மிகவும் பாராட்டுகளைப் பெற்ற அமிதாப் பச்சன் சுமார் 200 திரைப்படங்களுக்கு அதிகமாக நடித்துள்ளார். இதுவரை ஐந்து தேசிய விருதுகளை வென்றுள்ளார். கடைசியாக அமிதாப் பச்சன் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் 2024ல் வெளியானது. 2025ல் வெளியான 120 பகதூர் படத்தில் வாய்ஸ் ஓவர் அளித்திருந்தார். அடுத்ததாக கல்கி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை தன் ரசிகர்களைச் சந்திக்க வீட்டிலிருந்து வெளியே வந்த அமிதாப் பச்சன் துப்பாக்கி குண்டுகள் துளைக்காத கண்ணாடி பாதுகாப்புடன் வந்தார். இதனைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தாலும் கடந்த சில நாள்களுக்கு முன் நடிகர் டைகர் ஷெராஃப் லாரன்ஸ் பிஷ்னாய் குழுவினரால் துப்பாக்கி சூட்டிற்கு ஆளானார். நல்வாய்ப்பாக, டைகர் ஷெராஃப் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, அமிதாப் பச்சன் பாதுகாப்பு கருதி ரசிகர்களை இப்படிச் சந்தித்தாராம். பழம்பெரும் சூப்பர் ஸ்டார் நடிகருக்கே பாதுகாப்பு அச்சம் ஏற்படும் அளவிற்குத்தான் நாட்டின் சூழல் இருக்கிறது என ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
குண்டு துளைக்காத கண்ணாடி பாதுகாப்புடன் வந்த அமிதாப் பச்சன்! ஏன்?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗